Home
Mobile

ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்: ஹுவெய் அதிரடி

By Super
ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்: ஹுவெய் அதிரடி
குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களை வெளியிட உள்ளது ஹுவெய் நிறுவனம். ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்கள், ஸ்மார்ட்போன் விலையில் தான் கிடைக்கும். ஏனென்றால் அதன் தொழில் நுட்பம் அப்படி.

ஆனால் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட போன்கள், மலிவான விலையில் ஹுவெய் நிறுவனத்தின் மூலம் வெளிவர உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படு்கிறது.

இந்த குறைந்த விலை ஆன்ட்ராய்டு போனில் 3ஜி காம்பாட்டிபிலிட்டி இல்லை. ஆனால் ஜிபிஎஸ், வைபை, புளூடூத் போன்ற அனைத்து சவுகரியங்களையும் இதில் பெற முடியும். அந்த வகையில் ஹுவெய் யூ8110 மொபைல் 2.8 இஞ்ச் திரை வசதி கொண்டது.

இதில் ஆன்ட்ராய்டு 2.1 வெர்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆன்ட்ராய்டு 2.2 வெர்ஷனாக விரிவு செய்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்படும் என்று நம்பப்படுகிறது. ஹுவெய் நிறுவனத்தின் இத்தகைய ஸ்மார்ட்போன் வசதி கொண்ட போன்கள் ரூ.4,000 விலையில் இருந்து ரூ.6,000 விலை வரையில் கிடைக்கும்.

ஹுவெய் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆனந்த் நரங், உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஆன்ட்ராய்டு மொபைல்களைக் குறைந்த விலையில் உருவாக்குவதில், கவனம் செலுத்தயிருப்பதாகக் கூறினார். இந்த குறைந்த விலை ஆன்ட்ராய்டு போனுக்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X