வாட்டர் புரூப் வசதியுடன் வரும் ஹுவெய் மொபைல்போன்

Posted By: Staff

வாட்டர் புரூப் வசதியுடன் வரும் ஹுவெய் மொபைல்போன்
ஹுவெய் எக்ஸ்பெடிஷன் என்ற மொபைலை ஹுவெய் நிறுவனம் டிஸ்கவரி பிராண்டு மூலம் அறிமுகம் செய்ய உள்ளது. ஹுவெய் நிறுவனம் பல்வேறு மொபைல்களைக் கொடுத்து, வாடிக்கையாளர்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வாட்டர் புரூப், டஸ்ட் ப்ரூஃப் மற்றும் ஷாக் புரூப் வசதி கொண்ட புதிய மொபைலை டிஸ்கவரி பிராண்டு மூலம் அறிமுகம் செய்ய உள்ளது.

இதில் ஜிபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் நெட் வசதியினையும் எளிதாகப்பெற முடியும். ஹுவெய் நிறுவனத்தின் உயர் அதிகாரியான நிக்கோலஸ் போனார்ட் கூறுகையில், வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவரும் வகையில் இதன் தொழில் நுட்பம் இன்னும் மேம்படுத்தப்படும்," என்று கூறினார்.

ஹுவெய் மொபைல்கள், தொடர்பு கொள்வதற்கு மட்டும் அல்லாமல், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொபைலாக இருக்க வேண்டும் என்பதும் இந்நிறுவனத்தின் நோக்கம் என்றும் நிக்கோலஸ் போனார்டு கூறினார்.

இந்த ஹுவெய் எக்ஸ்பெடிஷன் மொபைல் பற்றிய விவரங்களும், இதன் விலை பற்றிய விவரங்களும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot