Home
Mobile

எச்டிசி டிராபி vs மோட்டோரோலா டிரையம்ப் ஒப்பீடு

By Super
எச்டிசி டிராபி vs மோட்டோரோலா டிரையம்ப் ஒப்பீடு
டெல்லி: மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து வருவதால், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் விற்பனை 40 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இந்திய மார்க்கெட்டில் பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் எச்டிசி நிறுவனத்தின் டிராபி ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோரோலாவின் டிரையம்ப் ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம்.

வடிவமைப்பு:

இரண்டு போன்களும் வெகு நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளன. 3.8 இஞ்ச் தொடுதிரையுடன் டிராபி போட்டிபோடுகிறது. ஆனால், மோட்டோரோலாவின் டிரையம்ப் 4.1 இஞ்ச் தொடுதிரை கொண்டுள்ளதால், அப்ளிகேஷன்களை எளிதாக பார்த்து இயக்க முடிகிறது. மேலும், கண்ணை கவரும் வகையிலும் உள்ளது.

மல்டிமீடியா:

இரண்டு போன்களிலும் அனைத்து லேட்டஸ்ட் மல்டிமீடியா பார்மெட்டுகளும் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. ஹைடெபினிஷன் பார்மெட்டில் வீடியோ பைல்களை கண்டு மகிழலாம். எப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஹோம்தியேட்டர் இணைப்பதற்கான ஸ்லாட் உள்ளிட்டவை இரண்டிலும் பொதுவாக காணப்படும் அம்சங்கள்.

கேமரா:

720பி வீடியோ ரெக்கார்டிங் தொழில்நுட்பம் கொண்ட ஆற்றல்வாய்ந்த கேமரா இரண்டு போன்களையும் சமமாக பார்க்க தோன்றுகிறது. இரண்டு போன்களின் பின்பக்கத்திலும் 5 மெகாபிக்செல் கொண்ட கேமராவும், வீடியோ காலிங் வசதியை அளிக்கும் முகப்பு கேமராவும் உள்ளன.

டேட்டா ஸ்டோரேஜ்

இரண்டு போன்களும் தேவையான அளவு மெமரி திறனை கொண்டுள்ளன. மோட்டோரோலாவின் டிரையம்ப் மாடலில் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி கார்டை பொருத்திக்கொள்ளலாம். ஆனால், எச்டிசி டிராபியில் கூடுதல் மெமரிக்கான ஆப்ஷன் இல்லை.

தகவல் பரிமாற்ற வசதி:

இரண்டிலும் 2ஜி மற்றும் 3ஜியில் அதிவேக இன்டர்நெட் வசதியை பெறமுடிகிறது. ஜிபிஆர்எஸ், எட்ஜ், புளூடூத், வை-பை ஆகிய தகவல் பரிமாற்ற வசதியும் கொண்டுள்ளன.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்:

எச்டிசி டிராபி ஸ்மார்ட்போன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், மோட்டோரோலாவின் டிரையம்ப் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்குகின்றன.

விலை:

இரண்டு மாடல்களும் மார்க்கெட்டில் ரூ.35,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுகின்றன. விலையில் பெரிய அளவு வித்தியாசமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X