விரைவில் புதிய பட்ஜெட் போன்: ஏர்ஃபோன் அறிமுகப்படுத்துகிறது

தவிர, தனது வாடிக்கையாளர் அடித்தளத்தை வலுவாக்கும் வகையில் புதிய பட்ஜெட் போன்களையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஏஎப்-155 என்ற குறியீட்டு பெயருடன் புதிய டியூவல் சிம் வசதியுடன் பட்ஜெட் போனை ஏர்போன் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ஜாவாவை அடிப்படையாக கொண்ட புரோப்பரீட்டரி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் அப்ளிகேஷன்களை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். கைக்கு கச்சிதமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் 3ஜிபி பார்மெட்டில் வீடியோ ப்ளேபேக் வசதியும் உள்ளது.
வீடியோ ரெக்கார்டிங் வசதி கொண்ட விஜிஏ கேமரா 640*480 பிக்செல் துல்லியத்தில் தரமான படங்களை எடுக்க உதவும். தவிர, படங்களை பெரிதாக்கி காட்டும் டிஜிட்டல் ஜும் வசதியும் உண்டு.
ஜிபிஆர்எஸ், யுஎஸ்பி போர்ட், புளூடூத் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத்துக்கான இணைப்பு வசதிகள் இதில் உண்டு.
க்யூட் வடிவமைப்பு
விஜிஏ கேமரா
புளூடூத்
ஜிபிஆர்எஸ்
ஜாவா
வீடியோ கேம்ஸ்
4ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டும் வசதி
இந்த போனின் விலை விபரங்களை ஏர்ஃபோன் இதுவரை வெளியிட வில்லை. ஆனால், ரூ.3,400 விலையில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications