Home
Mobile

3 Xiaomi போன்கள், 2 Redmi போன்கள் மீது விலைக்குறைப்பு.. எல்லா மாடலுமே அந்தந்த பிரிவில் கெத்து!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, பல்வேறு விலை பிரிவுகளின் கீழ் வாங்க கிடைக்கும் அதன் 5 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? அந்தந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

Xiaomi 12 Pro மீது ரூ.10,000 விலைக்குறைப்பு

சியோமி 12 ப்ரோ, மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது மற்றும் அந்த இரண்டுமே ரூ.10,000 விலைக்குறைப்பை பெற்றுள்ளன. தற்போது ரூ.10,000 என்கிற விலை வீழ்ச்சிக்கு பின்னர் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.52,999 க்கும், 12ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3 Xiaomi போன்கள் மற்றும் 2 Redmi போன்கள் மீது விலைக்குறைப்பு!

சியோமி 12 ப்ரோ முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 120W ஹைப்பர்சார்ஜ் டெக்னாலஜி, 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4600mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

Xiaomi 11 Lite NE 5G மீது ரூ.3,000 விலைக்குறைப்பு

மிட்-ரேன்ஜ் பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனானது சமீபத்தில் ரூ.3,000 விலைக்குறைப்பை பெற்றது. தற்போது இந்த சியோமி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.28,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி 11 லைட் என்இ 5ஜி முக்கிய அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: டயமண்ட் டேசில், ஜாஸ் ப்ளூ, டஸ்கனி கோரல் மற்றும் வினைல் பிளாக். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ராசஸர், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4250mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

Xiaomi 11i Hypercharge மீது ரூ.1,000 விலைக்குறைப்பு

120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் சியோமி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் மீது சமீபத்தில் ரூ.1,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 920 ப்ராசஸர், 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4500mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனை வெறும் 15 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்ய முடியும்.

Redmi K50i மீது ரூ.2,000 விலைக்குறைப்பு

சியோமியின் மிட்-ரேஞ்ச் கேமிங் ஸ்மார்ட்போனான ரெட்மி கே50ஐ சமீபத்தில் ரூ.2,000 விலைக்குறைப்பை பெற்றது. ரூ.2000 என்கிற விலை வீலிச்சிக்கு பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி கே 50ஐ முக்கிய அம்சங்கள்

இது 6.6 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 8100 சிப்செட், நீர் எதிர்க்கும் திறனுக்கான ஐபி53 (IP53) ரேட்டிங், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான சற்றே பெரிய 5080mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

Redmi 11 Prime 5G மீது ரூ.1,000 விலைக்குறைப்பு

சமீபத்தில் ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போனும் கூட விலைகுறைப்பை பெற்றது. ரூ.1,000 விலைக்குறைப்புக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.12,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது குரோம் சில்வர், தண்டர் பிளாக் மற்றும் மெடோ கிரீன் என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 11 ப்ரைம் முக்கிய அம்சங்கள்

5ஜி ஆதரவுடன் வரும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 5எம்பி மெயின் கேமராவையும் கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 Xiaomi and 2 Redmi Smartphones Which Got Price Cut Recently in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X