Home
Mobile

செப்.23 க்கு பின் இந்த 6 போன்களும் டம்மி ஆகிடும்.. 3 ஷாவ்மீ, 2 ரெட்மி, 1 போக்கோ.. இதில் 1 உங்ககிட்ட இருக்கா?

2025 செப்டம்பர் மாதத்துடன், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் செப்.23 ஆம் தேதி உடன்.. ஷாவ்மீ நிறுவனமானது அதன் சொந்த பிராண்டிங்கின் கீழ் வெளியான 3 மாடல்கள் மற்றும் அதன் துணை பிராண்டிங்கின் கீழ் வெளியான 2 ரெட்மி மற்றும் 1 போக்கோ மாடல்கள் என மொத்தம் 6 ஸ்மார்ட்போன்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்களை அனுப்புவத நிறுத்தவுள்ளது

அதாவது குறிப்பிட்ட 6 ஸ்மார்ட்போன்களின் அப்டேட் சுழற்சி (Update cycle) முடிவுக்கு வருகிறது. செப்டம்பர் 2025 க்கு பிறகு இந்த 6 ஸ்மார்ட்போன்களுக்கும் எந்தவிதமான பெரிய அப்டேட்களும் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்களும் அனுப்பிடப்படாது. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? இந்த 6 ஸ்மார்ட்போனாகளில் ஒன்றை வைத்துள்ளவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

செப்.23 க்கு பின் இந்த 6 போன்களும் டம்மி ஆகிடும்!

எந்தெந்த ஷாவ்மீ ஸ்மார்ட்போன்கள் இந்த 2025 செப்டம்பர் மாதத்துடன் சாப்ட்வேர் அப்டேட்களுக்கான முடிவை எட்டுகின்றன?
1. ஷாவ்மீ 11டி (Xiaomi 11T)
2. ஷாவ்மீ 11டி ப்ரோ (Xiaomi 11T Pro)
3. ஷாவ்மீ 11 லைட் 5ஜி என்இ (Xiaomi 11 Lite 5G NE)

நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 11டி, ஷாவ்மீ 11டி ப்ரோ மற்றும் ஷாவ்மீ 11 லைட் 5ஜி என்இ ஆகிய 3 மாடல்களுமே செப்டம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில் இவைகளுக்கு 3 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று உறுதியளிகப்பட்டு இருந்தது

ஆண்ட்ராய்டு 11 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று போன்களும் வாக்குறுதியளிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மேஜர் அப்டேட்களை பெற்ற பிறகு இப்போது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகின்றன. இதோடு இந்த 3 ஸ்மார்ட்போன்களுக்கும் எந்த மேஜர் அப்டேட்டும் வராது; வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இந்த போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வராது.

எந்தெந்த ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் இந்த 2025 செப்டம்பர் மாதத்துடன் சாப்ட்வேர் அப்டேட்களுக்கான முடிவை எட்டுகின்றன?
1. ரெட்மி ஏ1 (Redmi A1)
2. ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1 Plus)
3. போக்கோ எம்5 (Poco M5)

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ1 மற்றும் ரெட்மி ஏ1 பிளஸ் ஆகிய 2 மாடல்களுமே செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 12 ஸ்கின் உடன் வந்த இந்த ஸ்மார்ட்போன்கள் எம்ஐயுஐ 13 க்கு மேம்படுத்தப்பட்டன. ஆனால் 1 மேஜர் ஆண்ட்ராய்டு அப்பேட்டை கூட பெறவில்லை. இரண்டுமே இன்னும் ஆண்ட்ராய்டு 12 உடன் தான் இயங்குகின்றன; இனி வாழ்நாள் முழுவதும் அதே ஆண்ட்ராய்டு வெர்ஷனை தான் கொண்டிருக்கும்.

போக்கோ எம்5 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது கடந்த செப்டம்பர் 2022 இல் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மற்றும் எம்ஐயுஐ 13 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு 2 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டு இருந்தது. அதன்படியே கடந்த மூன்று ஆண்டுகளில் 2 அப்டேட்களை (ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆண்ட்ராய்டு 14) மற்றும் ஏராளமான செக்யூரிட்டி பேட்ச்களை பெற்றது. இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

மேற்கண்ட 6 ஸ்மார்ட்போன்களில் 1-ஐ வைத்துள்ள பயனர்கள் இனி என்ன செய்ய வேண்டும்? மேற்கண்ட 6 மாடல்களுமே எதிர்காலத்தில் எந்த அப்டேட்களையும் பெற வாய்ப்பில்லை. ஆனாலும் "புதிய அம்சங்கள்" எதையும் பெறாமல் தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும். ஆனால் செக்யூரிட்டி சிக்கல்களில் சிக்கலாம். ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறாத ஸ்மார்ட்போன்கள் ஆனது ஹேக்கர்களுக்கு ஒரு டம்மி போனை போலவே தெரியும்.

ஆக உங்கள் ஸ்மார்ட்போனில் ரகசியமான தகவல்கள் அல்லது தரவுகள் இருந்தால், நிச்சயமாக உங்களை நீங்களே ஆபத்தில் ஆழ்த்துவீர்கள். எனவே சமீபத்திய செக்யூரிட்டி பேட்ச்கள் மற்றும் ஏராளமான அற்புதமான அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை கொண்டுவரும் மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்களை தொடர்ந்து பெற, நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
3 Xiaomi 2 Redmi 1 Poco Phone Update Cycle Ends on Sep 23 What Should These Users Do
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X