சோனமுத்தா போச்சா.. OnePlus 11 போனை வாங்காமல் தவிர்க்க.. நச்சுனு 3 காரணங்கள்!
நீங்கள் ஏற்கனவே ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை வாங்கி இருந்தால்.. மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். ஏனென்றால் ஒன்பிளஸ் 11-இல் உள்ள 3 முக்கியமான குறைகளை பற்றியும், அதற்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதை பற்றிய கட்டுரையே இது!
முதலில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள 3 குறைகளை பற்றி பார்த்துவிடலாம். பின்னர் ஒன்பிளஸ் 11-க்கு மாற்றாக எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்? எதன் அடிப்படையில் அது ஒன்பிளஸ் 11-ஐ விட சிறந்த தேர்வு என்கிற முடிவுக்கு நாங்கள் வந்தோம் என்பதை பற்றி பார்க்கலாம்!

01. சுமாரான ஐபி ரேட்டிங்
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் நீர் எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங் மட்டுமே உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனால் நீர் மற்றும் தூசியினால் ஏற்படும் சேதத்தை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே தாங்க முடியும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் இதை விட சிறந்த ஐபி68 ரேட்டிங் உள்ளது.
02. அவ்வப்போது ஓவர்-லோடின் போது லேசாக திணறுகிறது
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உள்ளது. அன்றாட பணிகளின் போது நன்றாக செயல்பட்டாலும் கூட, பவர் ஏஃபிஸியன்சி (Power Efficiency) என்று வரும் போது சிறிய சிக்கலை சந்திக்கிறது. அதிக லோட் மற்றும் தெர்மல் நிலைகளின் போது அதிசிறப்பாக செயல்படவில்லை.
03. மேக்ரோ கேமராவில் சொதப்பல்
ஒன்பிளஸ் 11-இன் அல்ட்ரா-வைட் லென்ஸிலேயே மேக்ரோ மோட் உள்ளது. உண்மையிலேயே இதுவொரு நல்ல விஷயம் என்றாலும் கூட இதன் ஆட்டோமெட்டிக் மேக்ரோ மோட் ஆனது கேமரா லென்ஸ்களை ப்ரைமரியில் இருந்து அல்ட்ரா-வைடுக்கு மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் நல்ல ஃபோகஸ் உடனான ஒரு நல்ல போட்டோவை எடுப்பது கடினமான காரியமாக உள்ளது.
OnePlus 11 5ஜி-க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்?
ரூ.56,999 க்கு.. அதாவது 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடலை விட கிட்டத்தட்ட ரூ.10,000 குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள.. ஒன்பிளஸ் 11 5ஜி-க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற கேள்விக்கான முதன்மை பதில் - ஐக்யூ 11 5ஜி தான். ஏன் என்பதற்கு ஒன்றல்ல, மொத்தம் 5 காரணங்கள் உள்ளன.
அதென்ன காரணங்கள்?
முதல் காரணம் - டிசைன்! ஒன்பிளஸ் 11 உண்மையிலேயே அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பீடு என்று வந்துவிட்டால் ஐக்யூ 11 ஒருபடி முன்னே நிற்கும். அடுத்ததாக - டிஸ்பிளே! ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 2கே ரெசல்யூஷன் 6.7-இன்ச் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது.
ஆனால் ஐக்யூ 11-ல் அதே 2கே ரெசல்யூஷனுடன் சற்றே பெரிய 6.78-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. அதுமட்டுமா? இது ஒன்பிளஸ் 11-ஐ விட அதிக ரெஃப்ரெஷ் ரேட் ( 144 ஹெர்ட்ஸ்) உடன் வருகிறது. மூன்றாவது காரணம் - பேஸிக் வேரியண்ட்டில் அதிக இன்டர்னல் ஸ்டோரேஜ். ஐக்யூ 11 ஸ்மார்ட்போன் 256ஜிபி உடன் வருகிறது மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனானது 128ஜிபி உடன் வருகிறது.
நான்காவது காரணம் - ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்! இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே 5000mAh பேட்டரியுடன் வருகின்றன. ஆனால் ஒன்பிளஸ் 11-இல் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆனால் ஐக்யூ 11-இல் சற்றே வேகமான 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.
ஐந்தாவது காரணம் - நிறைய அம்சங்களை கொண்ட யுஐ! ஐக்யூ 11-இல் உள்ள ஃபன்டச் ஓஎஸ் 13 ஆனது ஒன்பிளஸ் 11-இல் உள்ள ஆக்ஸிஜென் ஓஎஸ்-ஐ விட அதிக அம்சங்களையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. ஆக மேலோட்டமாக பார்க்காமல் ஆழமாக பார்த்தால் ஐக்யூ 11 5ஜி தான் ஒன்பிளஸ் 11-ஐ விட சிறந்தது. கூடவே இதன் விலையும் (ரூ.59,999) கொஞ்சம் அதிகம்!


Click it and Unblock the Notifications








