Home
Mobile

Vivo X90 Pro-வை கண்ணை மூடிட்டு வாங்க 3 காரணங்கள்.. வாங்காமல் எஸ்கேப் ஆக 3 காரணங்கள்!

விவோவின் "தி பெஸ்ட் கேமரா போன்களான" விவோ எக்ஸ்90 சீரிஸ் (Vivo X90 Series) ஒருவழியாக இந்தியாவில் அறிமுகமாகின. இந்த சீரீஸின் கீழ் விவோ எக்ஸ்90 (Vivo X90) மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro) என்கிற 2 மாடல்கள் வாங்க கிடைக்கிறது.

வாங்குறதே வாங்குறோம்.. இந்த சீரீஸின் ஹை-எண்ட் மாடலான எக்ஸ்90 ப்ரோவை வாங்கிட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு நீங்கள் வரும் முன்னர்.. குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள் உள்ளன; அது வேறொன்றுமில்லை, இந்த போனின் 3 நிறைகளும்; 3 குறைகளும் தான்!

Vivo X90 Pro-வை கண்ணை மூடிட்டு வாங்க 3 காரணங்கள்!

நிறைகள் மற்றும் குறைகளை (Pros and Cons) பற்றி பேசும் முன், விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன், விலை மற்றும் விற்பனை விவரங்களை பற்றி பார்த்துவிடலாம். 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற சிங்கிள் வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்90 ப்ரோவின் இந்திய விலை ரூ.84,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவிற்கு (Pre Booking) திறந்துவிடப்பட்டுள்ள இந்த போன் வருகிற மே 5 முதல், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோர் (Vivo Online Store) வழியாக வாங்க கிடைக்கும்.

நம்பி வாங்க 3 காரணங்கள்: விவோ எக்ஸ்90 ப்ரோ மாடலில் வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத அளவிலான சிறந்த மெயின் கேமரா (Best Main Camera) உள்ளது என்றே கூறலாம். மேலும் இது சோனி ஐஎம்எக்ஸ்989 (Sony IMX989) சென்சாரை கொண்ட பெரிய 1-இன்ச் கேமராவுடன் (1-inch Camera) வரும் விவோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனும் ஆகும்.

இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 எம்பி (1-இன்ச்) + 50 எம்பி போர்ட்ரெய்ட் + 12 எம்பி அல்ட்ரா-வைட் என்கிற மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த முழு கேமரா செட்டப்பும் ஸெய்ஸ் (Zeiss) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இதில் மிகவும் அருமையான ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Good Fast Charging Support) உள்ளது. இது 120W டூயல் செல் பிளாஷ் சார்ஜ் (Dual-Cell Flash Charge) ஆதரவுடனான 4870mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 8 நிமிடங்களில் 0 - 50% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்.

கடைசியாக இது அட்டகாசமான டிஸ்பிளேவை (Best Display) வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி 3டி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10+ சப்போர்ட், துல்லியமான மற்றும் இயற்கையான ஸ்க்ரீன் கலர்களை வழங்கும் புதிய ஸெய்ஸ் நேச்சுரல் கலர் மோட் போன்றவைகளையும் கொண்டுள்ளது.

வாங்காமல் தவிர்க்க 3 காரணங்கள்: விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள, இதன் கேமரா செட்டப்பில் பெரிஸ்கோபிக் ஜூம் லென்ஸ் (Periscopic zoom lens) இல்லை. மேலும் இதன் சாஃப்ட்வேர் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்; கடைசியாக இதன் வயர்லெஸ் சார்ஜிங் இன்னும் கொஞ்சம் திறன்மிக்கதாக இருந்திருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 Reasons to buy Vivo X90 Pro Without any Hesitation And 3 Reasons to Skip Silently
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X