கண்ண மூடிட்டு வாங்க 3 காரணம்.. வாங்காமல் தவிர்க்க ஒரே ஒரு காரணம்.. ஆஃபர் விலையில் OnePlus Nord CE 3 விற்பனை!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) மாடலின் இந்திய விற்பனை இன்று (ஆகஸ்ட் 4) முதல் தொடங்குகிறது. ரூ.26,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் மீது எக்கச்சக்கமான அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மீதான சலுகைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000 பட்ஜெட்டிற்கு வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தானா என்கிற கேள்வி உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ஏனென்றால்.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம் என்பதற்கான 3 நேர்மையான காரணங்களையும் (Reasons to Buy), ஏன் வாங்கவே வேண்டாம் என்பதற்கான ஒரே ஒரு நியாயமான காரணத்தையும் (Reason to Avoid) தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்:
நம்பி வாங்குவதற்கான முதல் காரணம் - இதில் உள்ள வலுவான சிப்செட்: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 782ஜி ப்ராசஸர் (Snapdragon 782G processor) உடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்டின் ஓவர்லாக்டு வெர்ஷன் (Overlocked Version) ஆகும்.
இந்த சிப்செட் அன்றாட பணிகளை எளிதாக கையாளும் பெர்பார்மென்ஸை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு மென்மையான மல்டிடாஸ்கிங் அனுபவத்தையும் (Multitasking experience) வழங்கும். பிஜிஎம்ஐ (BGMI) போன்ற கேம்கள் ஆனது லோ செட்டிங்ஸ்-ல் கூட சீராக இயங்கும்.
நம்பி வாங்குவதற்கான இரண்டாவது காரணம் - இதில் உள்ள ஹை-குவாலிட்டி டிஸ்பிளே: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான சற்றே பெரிய 6.74-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை ( 6.74-inch AMOLED display) கொண்டுள்ளது.
இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ கொண்டிருந்தாலும் கூட, பேட்டரி லைஃப்பை (Battery Life) பாதுகாக்க டிஸ்பிளேவின் செயலற்ற தருணங்களில் ரெஃப்ரெஷ் ரேட் ஆனது 60ஹெர்ட்ஸ் ஆக குறையும் அம்சமும் இதில் உள்ளது. மேலும் ஸ்கிரீன் மினுமினுக்கும் சிக்கல்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிமிங்கிற்கான (2160Hz PWM dimming) ஆதரவும் இதில் உள்ளது.
நம்பி வாங்குவதற்கான மூன்றாவது காரணம் - நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான பெரிய பேட்டரி: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, அடிப்படை பயன்பாட்டின் கீழ் இது ஒரு நாளுக்கு மேலான பேட்டரி லைஃப்பை வழங்கும். அடிப்படை பயன்பாடு என்றால் மெசேஜ் அனுப்புதல், கால் செய்வது மற்றும் சில வீடியோக்களைப் பார்ப்பது ஆகியவைகள் அடங்கும்.
அதிர்ஷ்டவசமாக, ஒன்பிளஸ் நிறுவனமானது இன்னமும் தனது ஸ்மார்ட்போன்களின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜரை அனுப்புகிறது. நினைவூட்டும் வண்ணம் சில நிறுவனங்கள் சார்ஜரை அனுப்புவதை நிறுத்திவிட்டன. மேலும் இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனும் வருகிறது. இது பேட்டரியை 95 சதவீதத்திற்கு நிரப்ப வெறும் 30 நிமிடங்களே எடுத்துக்கொள்ளும்.
வாங்காமல் தவிர்ப்பதற்கான ஒரே ஒரு காரணம் - இதில் அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) இல்லை: பலருக்கும் இதுவொரு சாதாரணமான காரணமாக தெரியலாம். இருப்பினும் ஒவ்வொரு ஒன்பிளஸ் போனிலும் உள்ள சிறப்பான அம்சமாக இது கருதப்படுவதால்.. அலெர்ட் ஸ்லைடர் இல்லாதது சிலருக்கு ஒரு பெரிய குறையாக தோன்றலாம்!
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? ஐசிஐசிஐ (ICICI) வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனை மற்றும் ஒன்கார்டு (OneCard) வழியாக, ஒன்பிளஸ்.இன் (OnePlus.in) வழியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி (Instant Offer) கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் அமேசான் வலைத்தளம் (Amazon Website) வழியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்ப்போனை வாங்கினால், எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு இஎம்இ விருப்பங்களை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
இஎம்ஐ விருப்பங்களை பற்றி பேசுகையில், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஒன்கார்டு கார்டு வைத்து இருப்பவர்கள், 6 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) விருப்பங்களை பெறலாம். இது தவிர்த்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








