அவசரப்பட்டு இந்த புதிய VIVO போனை வாங்கிடாதீங்க.. வெறித்தனமான OIS கேமரா.. சுண்டி இழுக்கும் லுக்.. ஆனால்?
எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல், மிட்-ரேன்ஜ் விலை பிரிவின் கீழ் விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக விவோ வி29இ (Vivo V29e) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சத்தமின்றி அறிமுகம் செய்ய்யப்பட்டுள்ளதால் இதை ஒரு சுமாரான ஸ்மார்ட்போன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்!
விவோ வி29இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பார்க்கும் போது ரூ.30,000 க்குள் என்கிற விலை பிரிவில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் (Best Phone Under Rs 30000) ஒன்றாக இது உருமாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் சில குறைகளும் உள்ளன.

ரூ.26,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும் விவோ வி29இ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டைல் ஆன வடிவமைப்பு, திறமையான செல்பீ கேமரா மற்றும் நல்ல ரியர் கேமரா செட்டப்பில் முன்னுரிமை செலுத்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இருப்பினும், இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்னதாக.. இதை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 3 முக்கிய காரணங்களையும் (Reasons to Buy), இதை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 2 சாத்தியமான குறைபாடுகளையும் (Reasons to Avoid) நீங்கள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
நம்பி வாங்க.. முதல் காரணம்: இதன் நேர்த்தியான வடிவமைப்பு! சந்தேகத்திற்கு இடமின்றி விவோ வி29இ அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. லுக் (Look) மட்டுமே உங்களுக்கான ஓரே அளவுகோலாக இருந்தால், இந்த போன் முழுக்க-முழுக்க உங்களுக்கானது தான். குறிப்பாக இதன் ஆர்ட்டிஸ்டிக் ரெட் கலர் வேரியண்ட் (Artistic Red colour variant) ஆனது கண்களை சுண்டி இழுக்கிறது!
நம்பி வாங்க.. இரண்டாவது காரணம்: அட்டகாசமான அவுட்புட்டை வழங்கும் இதன் மெயின் ரியர் கேமரா! இதன் கேமரா செட்டப்பில் 64எம்பி ஓஐஎஸ் மெயின் கேமரா (64MP OIS Main Camera) உள்ளது. இது ஈர்க்கக்கூடிய டைனமிக் ரேன்ஜ் (dynamic range) மற்றும் குறைபாடற்ற ஷார்ப்னஸ் (sharpness) உடனான, துடிப்பான படங்களை கைப்பற்றுகிறது. குறிப்பாக போர்ட்ரெய்ட் மோட் (Portrait mode) ஷாட்கள் அட்டகாசமாக உள்ளன!
நம்பி வாங்க.. மூன்றாவது காரணம்: இதன் அழகான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே! இந்த ஸ்மார்ட்போனில் 10-பிட் 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே உள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh rate) மற்றும் 1200ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரெட் (1200Hz touch sampling rate), 130 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது விலையை மீறிய வியூவிங் மற்றும் ஸ்க்ரோலிங் அனுபவத்தை வழங்குகிறது.
வாங்காமல் தவிர்க்க.. முதல் காரணம்: இதில் உள்ள ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டின் செயல்தின்! அன்றாட செயல்பாடுகளின் போது விவோ வி29இ ஸ்மார்ட்போன் ஆனது ஒரு திடமான பெர்ஃபார்மென்ஸை (Solid Performance) வழங்குகிறது. அதாவது ப்ரவுஸிங், மெசேஜிங், காலிங், பேஸிக் ஆன மல்டி-டாஸ்கிங்கில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் ஹெவியான கேமிங்கின் (Heavy Gaming) போது, நீடித்த பயன்பாட்டின் (Long Time Usage) போது, இதன் செயல்திறன் பாதிக்கிறது; தடுமாற்றம் அடைகிறது; பின்னடைவுகளை சந்திக்கிறது மற்றும் போன் வெப்பமும் அடைகிறது. இந்த விஷயத்தின் முக்கிய சாராம்சம் என்னவென்றால் - ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டில் (Snapdragon 695 SoC) எந்த பிரச்சனையும் இல்லை, இந்த சிப்பை ரூ 30,000 ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவது தான் பிரச்சனை!
வாங்காமல் தவிர்க்க.. இரண்டாவது காரணம்: இதன் விலை நிர்ணயம்! விவோ வி29இ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ 26,999 க்கும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ 28,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








