Home
Mobile

கண்ண மூடிட்டு வாங்க 3 காரணம்.. வாங்காமல் தவிர்க்க ஒரே ஒரு காரணம்.. புது Motorola 5ஜி போன் அறிமுகம்..

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் (Motorola Edge 70 Pro Plus) ஸ்மார்ட்போனை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

சரி இப்போது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை ஏன் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம் என்பதற்கான 3 நேர்மையான காரணங்களையும் (Reasons to Buy), ஏன் வாங்கவே வேண்டாம் என்பதற்கான ஒரே ஒரு நியாயமான காரணத்தையும் (Reason to Avoid) இங்கே பார்க்கலாம்.

புது மோட்டோரோலா  5ஜி போன் அறிமுகம்.. கண்ண மூடிட்டு வாங்க 3 காரணம்..

நம்பி வாங்குவதற்கான முதல் காரணம்: 6.8-இன்ச் 1.5கே 10-பிட் எக்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 x 1272 பிக்சல்ஸ், 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக மற்ற போன்களை விட சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் இந்த போனின் டிஸ்பிளே. அதுவும் உங்கள் கண்களைப் பாதுகாக்க சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) ஆதரவு உள்ளதால் கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாகப் பயன்படும்.

நம்பி வாங்குவதற்கான இரண்டாவது காரணம்: 50எம்பி LYTIA-710 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு அல்ட்ராபோகஸ் கேமரா + 50எம்பி periscope டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் போன். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே (60fps) வீடியோ பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த செல்பி கேமராவும் 4கே (60fps) வீடியோ பதிவு செய்யும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் கேமரா மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

நம்பி வாங்குவதற்கான மூன்றாவது காரணம்: சக்திவாய்ந்த 3.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் 4என்ம் SoC (Octa-Core Dimensity 8500 Extreme 4nm SoC) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் தரமான Arm Mail-G720 MC8 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

புது மோட்டோரோலா  5ஜி போன் அறிமுகம்.. கண்ண மூடிட்டு வாங்க 3 காரணம்..

வாங்காமல் தவிர்ப்பதற்கான ஒரே ஒரு காரணம்: பல முன்னணி நிறுவனங்கள் 8000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போன்ககளை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் மோட்டோரோலா நிறுவனம் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் போனுக்கு 6500எம்ஏஎச் பேட்டரியை மட்டுமே வழங்கி உள்ளது. மற்ற நிறுவனங்களின் போன்கள் இரண்டு நாட்கள் முதல் மூன்று நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும். ஆனால் இந்த புதிய மோட்டோரோலா ஒரு நாள் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் விலை: 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் போனின் விலை ரூ.47,999-ஆக உள்ளது. அதேபோல் சிக்கரி காபி, ஜின்ஃபாண்டெல் மற்றும் ஸ்டார்மி சீ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். ஜூன் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு, ஃபிளிப்கார்ட், மோட்டோரோலா.இன் (Motorola.in) மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
3 Reasons to Buy motorola edge 70 Pro Plus Without Hesitation 1 Reason to Avoid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X