நம்பி வாங்க நச்சுனு 3 காரணம்.. தவிர்க்க 2 நியாயமான காரணம்.. 8000mAh பேட்டரி OnePlus N6 ஆர்டர் போடலாமா?
8000mAh என்கிற அளவிலான பிக் பேட்டரி உடன், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் என்6 5ஜி (OnePlus N6 5G) மாடலானது நாளை முதல் (அதாவது ஜூலை 4 ஆம் தேதி முதல்) விற்பனைக்கு வருகிறது.
ரூ.20,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட் விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் போடலாமா, வேண்டாமா என்கிற யோசனையில் உள்ளீர்கள் என்றால்? ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஏன் நம்பி வாங்கலாம்? ஏன் வாங்காமல் தவிர்க்கலாம்? என்பதற்கான காரணங்கள் இதோ:

ஒன்பிளஸ் என்6-ஐ நம்பி வாங்க 3 காரணங்கள்:
01. மிகவும் எளிதாக 2 நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்கும் 8000mAh பேட்டரி
02. தினசரி பயன்பாட்டிற்கு நம்பகமான மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்
03.விலைக்கு ஏற்ற, இயல்பான தோற்றமளிக்கும் படங்களை பிடிக்கும் 50MP (f/1.8) ரியர் கேமரா
ஒன்பிளஸ் என்6-ஐ வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்:
01. 8000mAh பேட்டரி என்கிற அளவிலான பெரிய பேட்டரிக்கு 45W சார்ஜிங் என்பது சற்று மெதுவான சார்ஜிங் ஸ்பீட் ஆக தோன்றுகிறது.
02. ஒருபக்கம் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை (மினி ஸ்மார்ட்போன்களை) அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்-ன் இந்த ஸ்மார்ட்போன் கையில் பிடிக்கும்போது சற்று பருமனாகவும், அளவில் பெரியதாகவும் உணரப்படுகிறது.
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16
- இரண்டு முக்கிய ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள்
- 6.75 இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate)
- எச்பிஎம் மோட்-ல் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்
- 6ஜிபி வரையிலான ரேம்
- 128ஜிபி வரையிலான ஆன்போர்ட் ஸ்டோரேஜ்
- எப்/1.8 அப்பர்ச்சர் (aperture) கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா
- 10x வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதி
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 1080p/60 fps வரையிலான தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- டூயல்-வியூ (Dual-View) வீடியோ மோட்
- 8,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- மூன்று நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது
- ஐபி65 ரேட்டிங்
- MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ்
ஒன்பிளஸ் என்6 விலை, விற்பனை, சலுகைகள்: இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது
அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனம் அமேசான் ப்ரைம் டே (Amazon Prime Day) சிறப்பு சலுகையாக ரூ.1,000 தள்ளுபடியையும், ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ.2,000 உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது.
மேலும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ வசதியையும் பெறலாம். முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதி அன்று அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. இது பிரெஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் மிட்நைட் க்ரீன் (Midnight Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications