Home
Mobile

சைனீஸ் ஸ்பெஷல்.. Xiaomi 14 Civi இந்திய விற்பனை ஆரம்பம்! நம்பி வாங்க 3 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 1 காரணம்!

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போனை 'சைனீஸ் ஸ்பெஷல்' என்று குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக ஷாவ்மீ நிறுவனம் அதன் சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யும். அதாவது சிவி சீரிஸ் போன்கள் ஆனது பிரத்யேகமாக சீனாவில் மட்டுமே அறிமுகமாகும். ஆனால் இந்த வழக்கம் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வழியாக உடைக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூன் 20) முதல் இந்திய விற்பனையை தொடங்குகிறது.

இந்திய மொபைல் சந்தை மற்றும் இந்தியர்களுக்கு ஷாவ்மீ நிறுவனம் புதிதல்ல; இது நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாகும். ஆனால் சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன் அப்படி இல்லை. இது முதல் முறையாக இந்தியாவிற்கு வருகிறது. ஆகையால் இதை நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகங்கள் எழுவது சகஜமே. அப்படி இருக்க ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 3 காரணங்களும், வாங்காமல் தவிர்ப்பதற்கான 1 நியாயமான காரணமும் இதோ:

Xiaomi 14 Civi  நம்பி வாங்க 3 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 1 காரணம்!

ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.47,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது க்ரூஸ் புளூ, மேட்சா க்ரீன் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் ஜூன் 20 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் பிளிப்கார்ட், எம்ஐ.காம் (Mi.com), எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் ஷாவ்மீயின் ரீடெய்ல் பார்ட்னர்ஸ் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55-இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ், வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் (IceLoop) கூலிங் சிஸ்டம் போன்றவைகளை கொண்டுள்ளது.

Xiaomi 14 Civi  நம்பி வாங்க 3 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 1 காரணம்!

கேமராக்களை பொறுத்தவரை, இபோது சம்மிலக்ஸ் லென்ஸுடன் இணைந்து லைகாவால் வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் + 2எக்ஸ் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12-மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.

இதுதவிர்த்து டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ-ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.

Xiaomi 14 Civi  நம்பி வாங்க 3 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 1 காரணம்!

நம்பி வாங்கலாமா? வேண்டாமா? ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 3 காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று - அதன் அற்புதமான டிசைன் மற்றும் தரமான பில்ட் குவாலிட்டி. இரண்டாவது - அதன் பெரிய மற்றும் பிரகாசமான டிஸ்பிளே. மூன்றாவது - பக்காவான அவுட்புக்களை வழங்கும் அதன் கேமரா செட்டப். இருந்தாலும் கூட இந்த ஸ்மார்ட்போனில் ஒரு சின்ன குறை உள்ளது. அது இந்த ஸ்மார்ட்போனின் சற்றே சரியான பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். சிலருக்கு இது பெரிய குறையாக கூட தெரியலாம்!

Best Mobiles in India

English summary
3 Reasons to Buy and 1 Reason to Skip Xiaomi 14 Civi Smartphone in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X