Home
Mobile

ஒண்ணுக்கு 1 சளைச்சது இல்ல.. ரூ.8000 - ரூ.18000 பட்ஜெட்டில்.. 3 புதிய போன்கள்.. எதை வாங்கலாம்?

2024 மார்ச் மாதம் இன்னும் முடியவில்லை என்றாலும் கூட, இம்மாதம் திட்டமிடப்பட்டு இருந்த மற்றும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான ஸ்மார்ட்போன்கள் எல்லாமே அறிமுகமாகி விட்டன. ஒருவேளை புதிதாக அறிமுகமான போன்களில் (New Phones) ஏதேனும் ஒன்றை வாங்க விரும்பினால்.. எந்த மாடலை வாங்கலாம்? ஏன் வாங்கலாம்?

01. ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G): ரூ.20,000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை தேடும் எவருமே.. கண்களை மூடிக்கொண்டு இந்த ஸ்மார்போனை வாங்கலாம், இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.8,000 - ரூ.18,000 பட்ஜெட்டில்.. 3 புதிய போன்கள்.. எதை வாங்கலாம்?

இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் 16ஜிபி வரையிலான ரேம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.1, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 67W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்ளை கொண்டுள்ளது.

02. விவோ டி3 5ஜி (Vivo T3 5G): உங்களுடைய பட்ஜெட் ரூ.20,000தான். ஆனால் ரியல்மி மாடலை வாங்க விருப்பம் இல்லை என்றால்.. விவோவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனா வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.8,000 - ரூ.18,000 பட்ஜெட்டில்.. 3 புதிய போன்கள்.. எதை வாங்கலாம்?

இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ, 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

03. லாவா ஓ2 (Lava O2): சூப்பர்-பட்ஜெட் விலையில், அதாவது ரூ.10,000 க்குள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கு இதுவோரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த லாவா ஸ்மார்ட்போன் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8,499 ஆகும்.

ரூ.8,000 - ரூ.18,000 பட்ஜெட்டில்.. 3 புதிய போன்கள்.. எதை வாங்கலாம்?

இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் எச்டி+ டிஸ்பிளே, யுனிசாக் டி616 சிப்செட், 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ், 50எம்பி டூயல் AI கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி, ப்ளோட்வேர் அல்லது விளம்பரங்கள் இல்லாத ஸ்டாக் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஒருவேளை மேற்கண்ட மூன்று புதிய ஸ்மார்ட்போன்களுமே உங்களை 'இம்ப்ரெஸ்' செய்யும்படி இல்லை என்றால்.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) மாடலுக்காக காத்திருக்கலாம். இது வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலையை பொறுத்தவரை, இது இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரூ.8,000 - ரூ.18,000 பட்ஜெட்டில்.. 3 புதிய போன்கள்.. எதை வாங்கலாம்?

இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ், 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி, 20Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான எட்ஜ்-டு-எட்ஜ் 1.5கே ரெசல்யூஷன் டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், யூஎப்எஸ் 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஆக்சிஜென் ஓஎஸ் 14 போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும்.

இதுவும் பிடிக்கவில்லை என்றால் மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ (Moto Edge 50 Pro) மாடலுக்காக காத்திருக்கவும். இது ஏப்ரல் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், வேகன் லெதர் பேனல் மற்றும் மெட்டல் ஃபிரேம் உடனான பிரீமியம் டிசைன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு OLED டிஸ்பிளேவுடன் வரும் இது ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 Newly launched phones Realme Narzo 70 Pro 5G Vivo T3 5G Lava O2 Which one you need to buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X