Home
Mobile

பிப்.14 காதலர் தினம்.. களைகட்ட போகுது.. ஒன்னு ரூ.7000.. இன்னொன்னு ரூ.25000.. 3 புதிய போன்கள் அறிமுகம்!

கடந்த சில வாரங்களை போல, இந்த வாரம் பல எண்ணிக்கையிலான புதிய ஸ்மார்ட்போன்கள் (New Smartphones) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட போவதில்லை. மாறாக வெறும் 3 மொபைல் பிராண்டுகள் மட்டுமே தத்தம் புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளன.

சுவாரசியமாக 3 மொபைல் பிராண்டுகளுமே தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை "பேக் டூ பேக்" அறிமுகம் செய்யவுள்ளன. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. வெளியாகும் 3 புதிய மாடல்களுமே அந்தந்த விலைப்பிரிவில் சக்கைபோடு போடப்போகும் அளவிற்கு "வெயிட்டான" ஸ்மார்ட்போனாகளாக உள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

பிப்.14 மற்றும் பிப்.15-ல் 3 புதிய போன்கள் அறிமுகம்!

01. ரெட்மி ஏ3 (Redmi A3): ரெட்மியின் இந்த புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஹாலோ டிசைன் (Halo design), லெதர் டெக்ஷர் கொண்ட பேக் பேனல் (Leather textured back panel), மற்றும் சர்க்குலர் டூயல் ரியர் கேமரா செட்டப் (Circular Design Dual Camera Setup) என ப்ரீமியம் லுக்கை வழங்குகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான டிஸ்பிளே, 6ஜிபி + 6ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என மொத்தம் 12ஜிபி அளவிலான ரேம், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிப்.14 மற்றும் பிப்.15-ல் 3 புதிய போன்கள் அறிமுகம்!

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ3 ஆனது 6.71 இன்ச் டிஸ்பிளே, 13எம்பி மெயின் கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்,, 8எம்பி செல்பீ கேமரா, 10W வயர்டு சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் போன்றவைகளை கொண்டிருக்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.7000 முதல் ரூ.9000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

02. மோட்டோ ஜி04 (Moto G04): மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் டிஸ்பிளே, இது 6ஜிபி வரையிலான ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், யுனிசாக் டி606 சிப்செட், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.

பிப்.14 மற்றும் பிப்.15-ல் 3 புதிய போன்கள் அறிமுகம்!

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், செல்பீ கேமராவிற்கான ஹோல் பன்ச் கட்அவுட் டிசைன், எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் ரியர் கேமரா, டால்பி அட்மோஸ் என்ஹான்ஸ்டு ஸ்பீக்கர்ஸ் (Dolby Atmos-enhanced speakers) போன்றவைகளையும் பேக் செய்யும்.

பிளாக், ப்ளூ, க்ரீன் மற்றும் ஆரஞ்சு என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன், அறிமுகத்திற்கு பின்னர் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி04 ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகி விட்டது. இந்தியாவில் இது தோராயமாக ரூ.10,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

பிப்.14 மற்றும் பிப்.15-ல் 3 புதிய போன்கள் அறிமுகம்!

03. ஹானர் எக்ஸ்9பி (Honor X9b): ஹானர் நிறுவனத்தின் இந்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட், 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜுடன் வரும்.

கேமராக்களை பொறுத்தவரை, 108எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5800எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 7.2 போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும். விலையை பொறுத்தவரை, சுமார் ரூ.25,000-ஐ சுற்றிய விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
3 New Smartphones Launching This Week in India Redmi A3 on Feb 14 Moto G04 Honor X9b on Feb 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X