கண்ணா இன்னும் முடியல.. மார்ச் மாத இறுதியில்.. இந்தியாவில் அறிமுகமாகும் 3 முக்கியமான போன்கள்!
2023 மார்ச் முடிவுக்கு வரப்போகிறது. இதற்கு மேல் இந்த மாதத்தில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படாது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால்.. அது தவறு! ஏனென்றால், இந்த மார்ச் மாதத்தில் மீதமுள்ள ஒரு சில நாட்களில் 3 முக்கியமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்த மார்ச்சில் ஏற்கனவே பல வகையான விலைப்பிரிவுகளின் கீழ் பல வகையான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருந்தாலும் கூட, புதிய மொபைல் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள், வரவிருக்கும் நாட்களில் அறிமுகமாகும் இந்த மூன்று போன்களையும் கூட கருத்தில் கொள்ளலாம்.

01. ரெட்மி நோட் 12 (Redmi Note 12): சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, அதன் ரெட்மி நோட் 12 சீரீஸின் கீழ் புதிய மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. அது ரெட்மி நோட் 12 4ஜி வேரியண்ட் ஆகும். இது வருகிற மார்ச் 30 ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஜனவரி 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 12 சீரீஸின் கீழ் வெளியாகும் முதல் 4ஜி மாடலாகும். நினைவூட்டும் வண்ணம் இந்த சீரீஸின் கீழ் 3 மாடல்கள் அறிமுகமாகின: ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி. தற்போது இந்த வரிசையில் ரெட்மி நோட் 12 4ஜி இணைய உள்ளது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனானது 8ஜிபி வரையிலான ரேம் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும் இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
02. ரெட்மி 12சி (Redmi 12C): ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் அதே மார்ச் 30 ஆம் தேதியன்று ரெட்மி 12சி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரெட்மி சி சீரிஸின் கீழ் வருவதால் இதுவொரு என்ட்ரி லெவல் அல்லது பட்ஜெட் விலை மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படும். ரெட்மி இந்தியாவின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் "அதன் விலை பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் வேகமான ஸ்மார்ட்போன்" ஆக இருக்கும். மேலும் இதில் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பும் இடம்பெறும்.
பேக் பேனலில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் வரும் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனானது 6.71 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மேலும் இது 5000mAh பேட்டரி உடன் வரும். கடைசியாக இது 6ஜிபி வரையிலான "வழக்கமான" ரேம் உடன் சேர்த்து 5ஜிபி வரையிலான எக்ஸ்டென்டட் ரேமையும் (Extended RAM) வழங்கும்.
03. மோட்டோ ஜி13 (Moto G13): லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி13-ஐ மார்ச் 29 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது மேட் சார்கோல் மற்றும் ப்ளூ லாவெண்டர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி மெயின் கேமரா இடம்பெறும். கடைசியாக இது 5000mAh பேட்டரியை பேக் செய்யும்; அது 10W சார்ஜிங்கை ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications








