இந்த 3 போன்களும் அறிமுகமாகும் வரை.. இந்த மாசம் வேற எந்த Phone-ஐயும் வாங்கிடாதீங்க!

|

நீங்கள் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை (Budget Phone) வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தாலும் சரி, அல்லது ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் மாடலை (Mid-range Phone) வாங்க வேண்டும் என்று பணம் சேர்த்து வைத்து இருந்தாலும் சரி..

அடுத்த சில தினங்களுக்கு - பல்லை கடித்துக்கொண்டு - கொஞ்சம் அமைதியாக இருக்கவும்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள இந்த அக்டோபர் மாதத்திற்குள், 3 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - அந்த 3 ஸ்மார்ட்போன்களுமே 5ஜி சப்போர்ட் உடன் வருகின்றன.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எம்மாதிரியான விலை நிர்ணயத்தின் கீழ் வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!

வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து  அல்ல!

வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து அல்ல!

நாம் இங்கே பேசும் 3 ஸ்மார்ட்போன்களுமே வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து வரும் மாடல்கள் என்று நீங்கள் நினைத்திருந்தால்.. அது முற்றிலும் தவறு!

ஏனென்றால், அந்த 3 ஸ்மார்ட்போன்களுமே சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மியின் (Redmi) ஸ்மார்ட்போன்கள் ஆகும். அதுவும் மிகவும் பிரபலமான நோட் சீரீஸ் (Note Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும்!

12, 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ பிளஸ்!

12, 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ பிளஸ்!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி, அதன் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.

இந்த சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி என்கிற 3 மாடல்கள் அறிமுகம் ஆகும்.

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

200MP கேமராவுடன் வரும்!

200MP கேமராவுடன் வரும்!

ரெட்மி நோட் 12 சீரீஸின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன Redmi Note 12 Pro+ 5G ஸ்மார்ட்போனில் 200MP ப்ரைமரி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் அது, சமீபத்தில் அறிமுகமான MediaTek Dimensity 1080 SoC-ஐ பேக் செய்யவும் அதிக வாய்ப்புள்ளது. இதே சிப்செட் மற்றொரு ப்ரோ மாடல் ஆன Redmi Note 12 Pro 5G-யிலும் இடம்பெறலாம்.

அதுமட்டுமில்ல.. 210W பாஸ்ட் சார்ஜிங் வேற!

அதுமட்டுமில்ல.. 210W பாஸ்ட் சார்ஜிங் வேற!

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் வேகமான 210W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இடம்பெறலாம் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, மொத்த Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே ஹை ரெஃப்ரெஷ் ரேட் உடனான AMOLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

எப்போது அறிமுகம்.. எப்போது முதல் விற்பனை?

எப்போது அறிமுகம்.. எப்போது முதல் விற்பனை?

ரெட்மி நோட் 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் துல்லியமான அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால் அவைகள் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படுவதும் மற்றும் அவைகள் அடுத்த மாதமே (நவம்பர் 2022) இந்தியாவிற்கு வருவதும் கிட்டத்ட்ட உறுதி என்றே கூறலாம்!

விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

ரெட்மி நோட் 12 5ஜி ஆனது ரூ.13,990 க்கும், ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஆனது ரூ.16,990 க்கும் மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஆனது ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தோராயமான விலை நிர்ணயங்களே ஆகும். அதிகாரப்பூர்வமான விலை விவரங்கள் அல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

வச்சிட்டாங்க ஆப்பு! 2023 முதல் Samsung, Sony, LG உட்பட பல டிவிகளுக்கு தடை! என்ன காரணம்?வச்சிட்டாங்க ஆப்பு! 2023 முதல் Samsung, Sony, LG உட்பட பல டிவிகளுக்கு தடை! என்ன காரணம்?

பட்ஜெட் விலையில் ரெட்மி பேட்!

பட்ஜெட் விலையில் ரெட்மி பேட்!

சமீபத்தில் ரெட்மி நிறுவனம், இந்தியாவில் தனது முதல் டேப்லெட்டையும் அறிமுகப்படுத்தி இருந்தது. அது ரெட்மி பேட் என்று அழைக்கப்படுகிறது.

இது மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர், 10.61 இன்ச் 2K ரெசல்யூஷன் டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 8எம்பி எச்டி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. இது ரூ.16,999 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது!

Best Mobiles in India

English summary
3 new redmi smartphones with 5G support launching this month october 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X