Home
Mobile

இனி சின்ராசை கையில புடிக்க முடியாதே.. 2 விட்ட வேகத்துல.. 3 வகையான விலை பிரிவில் 3 புது Realme 5G போன்கள்!

வாரத்துக்கு 1, மாதத்திற்கு 3 என.. தொடர்ச்சியான முறையில் பல புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நிறுவனம் எதுவென்று கேட்டால்.. நம்மில் பலரும் அசால்ட் ஆக பதில் கூறுவோம் - "ரியல்மி" என்று! அப்படியான ரியல்மி நிறுவனம் நேற்று (ஜன.16) இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில் மேலும் 3 ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.

நேற்றுடன் இந்தியாவில் ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 14 Pro Plus 5G) மற்றும் ரியல்மி 14 ப்ரோ 5ஜி (Realme 14 Pro 5G) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின. இன்று (ஜன.17) காலை, ரியல்மி நிறுவனம் இந்தியாவிற்கான ரியல்மி பி3 சீரீஸின் (Realme P3 Series) அறிமுகம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

3 வகையான விலை பிரிவில் 3 புது Realme 5G போன்கள்!

ரியல்மி பி3 சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது: ரியல்மி பி3 (Realme P3), ரியல்மி பி3 ப்ரோ (Realme P3 Pro) மற்றும் ரியல்மி பி3 அல்ட்ரா (Realme P3 Ultra). இந்த சீரீஸின் ப்ரோ மற்றும் அல்ட்ரா மாடல்கள் குறித்த முக்கிய விவரங்களை சமீபத்திய அறிக்கைகள் வெளிப்படுத்திய நிலையில் இந்த சீரிஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ரியல்மி பி3 குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

91 மொபைல்ஸ் வழியாக கிடைத்துள்ள தகவலின்படி ரியல்மி பி3 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகமாகும்: 6ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் +2 56ஜிபி என 3 கான்ஃபிகரேஷன்களில் வாங்க கிடைக்கும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது நெபுலா பிங்க், காமெட் கிரே மற்றும் ஸ்பேஸ் சில்வர் ஆகிய 3 வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு அறிமுகமான ரியல்மி பி2 சீரிஸில் ஒரே ஒரு மாடல் தான் உள்ளது, அது ரியல்மி பி2 ப்ரோ (Realme P2 Pro) ஸ்மார்ட்போனாகும். அதாவது ரியல்மி பி2 சீரீஸின் கீழ் வெண்ணிலா வேரியண்ட்டும் கிடையாது; அல்ட்ரா வேரியண்ட்டும் கிடையாது. ஆனால் பி3 சீரீஸ் அப்படி இருக்கப்போவதில்லை.

இந்நிறுவனம் 2025 ஜனவரி இறுதிக்குள் ரியல்மி பி3 அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரியல்மி பி3 ப்ரோ மாடல் ஆனது 2025 பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இது பிப்ரவரி 17 மற்றும் பிப்ரவரி 26 க்கு இடையில் அறிமுகம் செய்யப்படலாம்,.

ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிர்து. இதேபோல ரியல்மி பி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் கூட 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.

எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை, ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ,19,990 க்கும், ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.27,990 க்கும் மற்றும் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். அறிமுகத்தின் போது இந்த விலைகளில் சில மாற்றங்களையும் காணலாம்.

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி2 ப்ரோ ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகமானது. 8ஜிபி + 128ஜிபி, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்கள். இவைகள் முறையே ரூ.21,999, ரூ.24,999 மற்றும் ரூ.27,999 க்கு வாங்க கிடைத்தன. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 6.7-இன்ச் FHD+ 3D கர்வ்டு AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2சிப்செட் , 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ, 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 New Realme Launching Soon in India Realme P3 Realme P3 Pro Realme P3 Ultra Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X