Home
Mobile

வசவசனு.. ஒரே நாளில் 3 புதிய Realme போன்கள் அறிமுகம்.. ஒவ்வொன்னும் ஒரு ரகம்.. வெவ்வேறு விலை பிரிவு!

வருகிற மே 10 ஆம் தேதியன்று, சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி (Realme) ஒரு தரமான சம்பவத்தை செய்ய உள்ளது. குறிப்பிட்ட நாளில், ஒரே வெளியீட்டு நிகழ்வில் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. சுவாரசியமாக அந்த 3 மாடல்களுமே ஒரே சீரீஸின் கீழ் வெளியாகும்!

நாம் இங்கே பேசுவது ரியல்மி 11 சீரீஸ் (Realme 11 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான்! இதன் கீழ் வெளியாகும் 3 போன்களின் மாடல் பெயர் என்ன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஒவ்வொன்றும் என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? என்கிற விவரங்கள் இதோ:

ஒரே நாளில் 3 புதிய Realme போன்கள் அறிமுகம்.. எப்போது?

முன்னதாக அறிமுகமான ரியல்மி 10 சீரீஸின் "மேம்படுத்தப்பட்ட வாரிசுகளாக" வரும் ரியல்மி 11 சீரீஸின் கீழ் - வழக்கம் போல - ரியல்மி 11 (Realme 11), ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus) என்கிற 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, வெண்ணிலா மாடலான ரியல்மி 11 5ஜி மாடலானது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 6.4-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 900 சிப்செட் மற்றும் 64 எம்பி மெயின் ரியர் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம் .

அடுத்ததாக உள்ள ரியல்மி 11 ப்ரோவை பற்றி பெரிய அளவிலான விவரங்கள் இல்லை. இது 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்ற அம்சங்களை பேக் செய்யலாம் என்கிற தகவல்கள் மட்டுமே வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த சீரீஸின் ஹை-எண்ட் மாடலான ரியல்மி 11 ப்ரோ பிளஸ் பற்றி எக்கச்சக்கமான விவரங்கள் வெளியாகியுள்ளது. இது 200 எம்பி மெயின் கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்கலாம். இதுதவிர ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்; இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.18,999 க்கு வெளியாகலாம். அடுத்ததாக உள்ள ரியல்மி 11 ப்ரோவானது ரூ.28,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

கடைசியாக உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது ரூ.35,000 பட்ஜெட் பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொன்னால் இது ரூ.34,990 என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெறலாம். மே 10 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமான பிறகு, இந்த 3 போன்களும் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தகேமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ரியல்மி 10 (Realme 10) ஸ்மார்ட்போனானது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.. மேலும் ரியல்மி 10 ப்ரோ (Realme 10 Pro) மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் (Realme 10 Pro Plsu) மாடல்கள் ஆனது முறையே ரூ.18,999 மற்றும் ரூ.24,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
3 New Realme 5G Smartphones Launching Under Realme 11 Series on May 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X