மார்க்கெட்டை பொளந்து கட்டப்போகும் POCO.. பட்ஜெட் வாசிகளை குறி வச்சி 3 புது போன்கள்.. என்னென்ன மாடல்கள்?
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமும் சரி, அதன் துணை பிராண்ட் ஆன போக்கோ (POCO) நிறுவனமும் சரி.. இரண்டுமே, பட்ஜெட் வாசிகளை ஈர்க்கும் வகையில்.. மலிவு விலையில் நல்ல-நல்ல ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்வதற்கு பெயர்போன நிறுவனங்களாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
அந்த வரிசையில் - போக்கோ சி-சீரிஸின் கீழ் - மேலும் 3 பட்ஜெட் விலை போன்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதென்ன மாடல்கள்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

போக்கோவின் இந்த 3 புதிய ஸ்மார்ட்போன்களில் முதலில் அறிமுகமாக போவது போக்கோ சி65 (POCO C65) மாடல் தான். சமீபத்திய எஃப்சிசி பட்டியலின்படி, போக்கோ சி65 ஆனது இன்னும் அறிமுகம் செய்யப்படாத ரெட்மி13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கலாம்.
அறியாதோர்களுக்கு, சீன சந்தையில் ரெட்மி பிராண்டின் கீழ் அறிமுகமாகும் சில ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் போக்கோ பிராண்டின் கீழ் அறிமுகமாவது வழக்கம் தான். ஆனால் போக்கோ சி65 அறிமுகத்தில் உள்ள சுவாரசியத்தை பொறுத்தவரை ரீபிராண்டட் வெர்ஷன் ஆன ரெட்மி 13சி மாடலும் கூட இன்னும் அறிமுகமாகவில்லை.
இதற்கிடையில் தான், போக்கோ சி65 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் (Global Variant) சிங்கப்பூரின் ஐஎம்டிஏ சான்றிதழ் (Singapore IMDA certification) தளத்தில் காணப்பட்டுள்ளது; இது போக்கோ சி65 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களுடன் சேர்த்து, அதன் உடனடி வெளியீட்டை (Imminent Launch) உறுதிப்படுத்துகிறது.
போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வாரிசாக வரும் போக்கோ சி65 ஸ்மார்ட்போன் வன்பொருள் அடிப்படையில் சில புதிய முன்னேற்றங்களை கொண்டுவரும் என்று என்பதில் சந்தேகமே வேண்டாம். கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவல்களின்படி, போக்கோ சி65 (அல்லது ரெட்மி 13சி) ஆனது வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேவை பேக் செய்யும்.
கேமராவை பொறுத்தவரை போக்கோ சி65 அல்லது (ரெட்மி 13சி) ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் (Rear Camera Setup) 50எம்பி மெயின் கேமரா (50MP Main Camera) இடம்பெறும். சுவாரஸ்யமாக போக்கோ சி65 மாடலானது 4ஜி வேரியண்ட்டில் (4G Variant) மட்டுமின்றி, 5ஜி வேரியண்ட்டிலும் (5G Variant) அறிமுகமாகும்.
பெரும்பாலும் இது டைமென்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100 Plus) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும் இது பிளாக், ப்ளூ மற்றும் லைட் க்ரீன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம். கடைசியாக இது எல்டிஇ, ப்ளூடூத், வைஃபை 802.11ஏசி மற்றும் என்எஃப்சி ஆகியவற்றிற்கான ஆதரவை கொண்டிருக்கலாம்.
போக்கோ சி65 ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கு பிறகு, போக்கோ நிறுவனமானது போக்கோ சி51 (Poco C51) மற்றும் போக்கோ சி50 (Poco C50) ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட வாரிசுகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் எதுவும் ஆன்லைனில் லீக் ஆகவில்லை.
நினைவூட்டும் வண்ணம், போக்கோ சி65 மாடலின் முன்னோடியான போக்கோ சி55 (Poco) மாடலானது இந்த ஆண்டின் தொடக்கத்தில், சில கண்ணியமான அம்சங்களை பேக் செய்து, பட்ஜெட் வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நினைவூட்டும் வண்ணம் இது ஆக்டா கோர் ஹீலியோ ஜி85 சிப்செட் (Octa-core Helio G85 SoC) மூலம் இயக்கப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை பேக் செய்கிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. போக்கோவின் கூற்றுப்படி இது சுமார் 28 நாட்கள் ஸ்டேண்ட்பை டைம், 39 மணி நேரம் வரை டால்க் டைமை வழங்கும். இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 10.5 மணிநேரம் வரை கேமிங் டைமும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








