மொத்த OnePlus போன்களுக்கும் ஆப்பு.. இந்த 3 புதிய OPPO போன்களின் விலையும், அம்சங்களும் அப்படி!
ஒப்போ (Oppo) நிறுவனம் 3 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவைகள் ரெனோ 10 5ஜி (Reno 10 5G), ரெனோ 10 ப்ரோ 5ஜி (Reno 10 Pro 5G) மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி (Reno 10 Pro Plus 5G) மாடல்களாகும்.
கடந்த மே மாதமே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட இந்த 3 ரெனோ 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் என்ன? இந்த மூன்று மாடல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? இவைகள் எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி முக்கிய அம்சங்கள்: இது எச்டிஆர் 10 பிளஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 120 ஹெர்ட்ஸ் எல்டிபிஎஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் அமோஎல்இடி 3டி கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், 3,500மிமீ ஸ்கொயர் விசி லிக்விட் கூலிங் சர்பேஸ் ஏரியாவை கொண்டுள்ளது.
மேலும் இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் சென்சார் + 50-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 8- எம்பி வைட் ஆங்கிள் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது.
அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஃபேஸ் அன்லாக் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 4,700mAh பேட்டரியை பேக் செய்யப்பட்டுள்ளது. இது 100W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 27 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யும்.
ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி 3டி கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி சிப்செட், ஓஐஎஸ் உடனான 50எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 32எம்பி டெலிஃபோட்டோ சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஃபேஸ் அன்லாக்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 4,600mAh பேட்டரியை 80W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 28 நிமிடங்களில் பேட்டரியை நிரப்பும்.
ஒப்போ ரெனோ 10 5ஜி முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி 3டி கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், ஓஐஎஸ் உடனான 64எம்பி + 32எம்பி டெலிஃபோட்டோ + 8எம்பி சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
மேலும் இது அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஃபேஸ் அன்லாக்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அது 67W சூப்பர்விக் ஃபிளாஷ் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது 47 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை நிரப்பும்.
விலை மற்றும் விற்பனை: ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.54,999 ஆகும். ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி மாடலின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.39,999 ஆகும்.
ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு ப்ரோ மாடல்களும் ஜூலை 13 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இவைகள் பிளிப்கார்ட் (Flipkart), ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வரும்
வெண்ணிலா மாடலான ஒப்போ ரெனோ 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வருகிற ஜூலை 20 ஆம் தேதியன்று சரியாக (இந்திய நேரப்படி) மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும். இது ஐஸ் ப்ளூ மற்றும் சில்வரி கிரே கலர்களில் வாங்க கிடைக்கும். ப்ரோ மாடல்களானது க்ளாஸி பர்பிள் மற்றும் சில்வரி கிரே கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








