Home
Mobile

இப்போ வாங்கடா பார்ப்போம்.. சிங்கிள் சார்ஜில் 3 நாள் பேட்டரி.. கம்மி விலையில் 3 NOKIA ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

பழைய எதிரி சாம்சங்.. புதிய எதிரிகளான ரியல்மி, ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்களிடம் இருந்து ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பல போன்களுக்கு வேட்டு வைக்க.. நோக்கியா நிறுவனம் 3 புதிய போன்களை உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனம் ரூ.15,000 என்கிற பட்ஜெட்டின் கீழ், நோக்கியா ஜி22 (Nokia G22), நோக்கியா சி32 (Nokia C32) மற்றும் நோக்கியா சி22 (Nokia C22) என்கிற 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

3 நாள் பேட்டரி லைஃப்! கம்மி விலையில் 3 NOKIA ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. ஆனால் ஒரு பொதுவான விஷயம்!

நோக்கியாவின் இந்த 3 புதிய ஸ்மார்ட்போன்களுமே வெவ்வேறு விஷயங்களில் / அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. அதாவது நோக்கியா ஜி22 - எளிதாக பழுதுபார்க்கக்கூடிய ஒரு போனாகவும், நோக்கியா சி32 - ஒரு நல்ல சி-சீரீஸ் கேமரா போனாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள நோக்கியா சி22 - ஒரு திடமான, நீடித்து உழைக்கும் ஸ்மார்ட்போனாக உருவாக்கம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த 3 மாடல்களிலுமே ஒரு பொதுவான அம்சம் உள்ளது. நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த 3 போன்களுமே சிங்கிள் சார்ஜில் 3 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்!

NOKIA G22 அம்சங்கள்

- யுனிசாக் டி606 ப்ராசஸர்
- 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே
- 50எம்பி மெயின் கேமரா + 2MP டெப்த் கேமரா + 2MP மேக்ரோ கேமரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 20W சார்ஜிங் ஆதரவுடன் 5,050mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

NOKIA C22 அம்சங்கள்

- ஐபி 2 ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
- கடினமான 2.5D டிஸ்ப்ளே கிளாஸ்
- பாலிகார்பனேட் யூனிபாடி
- திடமான மெட்டல் சேஸ்
- 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே,
- யுனிசாக் 9863A1 ப்ராசஸர்
- 3ஜிபி வரை ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
- 13எம்பி டூயல் ரியர் கேமரா
- 8எம்பி செல்பீ கேமரா
- 5000mAh பேட்டரி
- 10W சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 4ஜி எல்டிஇ
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்)

NOKIA C32 அம்சங்கள்

- 50எம்பி மெயின் கேமரா
- 2எம்பி மேக்ரோ கேமரா
- 8எம்பி செல்பீ கேமரா
- 4ஜிபி வரை ரேம்
- மீதமுள்ள அம்சங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நோக்கியா சி22 உடன் ஒற்றுப்போகிறது.

NOKIA C22 விலை மற்றும் கலர் ஆப்ஷன்ஸ்

நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் 2ஜிபி + 64ஜிபி மற்றும் 3ஜிபி + 64ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட்டின் விலை நிர்ணயம் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 11,310 ஆகும். இது மிட்நைட் பிளாக் மற்றும் சாண்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

NOKIA C32 விலை மற்றும் கலர் ஆப்ஷன்ஸ்

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் 3ஜிபி + 64ஜிபி மற்றும் 4ஜிபி + 64ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட்டின் விலை நிர்ணயம் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 12,190 ஆகும். இது சார்கோல், ஆட்டம் க்ரீன் மற்றும் பீச் பிங்க் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

NOKIA G22 விலை மற்றும் கலர் ஆப்ஷன்ஸ்

நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போன் 4ஜிபி + 64ஜிபி மற்றும் 4ஜிபி + 128ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட்டின் விலை நிர்ணயம் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 15,700 ஆகும். இது மீட்டியர் க்ரே மற்றும் லகூன் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 New NOKIA Smartphones Launched Under Rs 15000 Budget Check Nokia C22 C32 G22 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X