வாங்க செல்லம்ஸ்.. ஒவ்வொன்னும் ஒரு ரகமா இருக்கே.. மே 27 இந்தியாவில் அறிமுகமாகும் 3 புதிய Tecno போன்கள்!
இம்மாத தொடக்கத்தில் நைஜீரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 3 டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன்கள் வருகிற மே 27 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது டெக்னோ கேமன் 20 சீரீஸ் (Tecno Camon 20 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இதன்கீழ் மூன்று ஸ்மார்ட்போன்கள் உள்ளன: டெக்னோ கேமன் 20 (Tecno Camon 20), டெக்னோ கேமன் 20 ப்ரோ (Tecno Camon 20 Pro) மற்றும் டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி (Tecno Camon 20 Pro 5G).

சீனாவை சேர்ந்த ட்ரான்ஷன் ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான டெக்னோ பிராண்ட்டின் இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே இந்திய சந்தையில் அறிமுகமாக தயார் நிலையில் உள்ளன. சுவாரசியமாக இந்த மூன்றுமே சென்சார்-ஷிப்ட் தொழில்நுட்பம் (Sensor-shift Technology), ஆர்ஜிபிடபுள்யூ ப்ரோ (RGBW Pro) மற்றும் போர்ட்ரெய்ட் மாஸ்டர் (Portrait Master) போன்ற கேமரா-சென்ட்ரிக் அம்சங்களுடன் வருகின்றன.
முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, டெக்னோ கேமன் 20 மாடலானது மீடிடாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட்டை கொண்டுள்ளது. அதே சமயம் கேமன் 20 ப்ரோ மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட்டை பேக் செய்கிறது மற்றும் கடைசியாக உள்ள கேமன் ப்ரோ 5ஜி மாடலானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் மூலம் இயங்குகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த 3 ஸ்மார்ட்போன்களை வருகிற மே 27 அன்று இந்தியாவில் அறிமுகமாகும். டெக்னோ நிறுவனம் இதை ட்விட்டர் (Twitter) வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து டெக்னோ கேமன் 20 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவும் (Pre-booking) இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த 3 டெக்னோ போன்களின் இந்திய விலை விவரங்கள் தற்போது வரை வெளிப்படுத்தப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, வெண்ணிலா மாடலானது ரூ.25,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள கேமன் ப்ரோ மற்றும் கேமன் ப்ரோ 5ஜி மாடல்கள் ஆனது முறையே ரூ.30,000 க்குள் மற்றும் ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, மூன்று ஸ்மார்ட்போன்களுமே இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Finger Print Sensor) உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் மூன்று மாடல்களுமே 64 மெகாபிக்சல் RGBW மெயின் சென்சார் மற்றும் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 16 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகம் செய்யப்படும். கடைசியாக இந்த மூன்று புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்களுமே 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கின்றன. இருப்பினும் பாக்ஸ் உடன் தொகுக்கப்பட்ட சார்ஜர் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications








