ஏப்.15 தான் கடைசி.. மொத்தம் 3 Moto போன்கள்.. ரூ.5000 டிஸ்கவுண்ட்.. லக் இருந்தா ஆர்டர் போட்டு அள்ளிக்கோங்க!
பிளிப்கார்ட் வலைதளமானது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு விற்பனை ஒன்றை அறிவித்துள்ளது. மெகா சேவிங் டேஸ் சேல் என்று அழைக்கப்டும் இந்த விற்பனையி, பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி தள்ளுபடி மற்றும் பிரத்யேக சலுகைகள் கிடைக்கிறது.
குறிப்பாக மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மீது 22% (ரூ.5000) வரையிலான நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. அப்படியாக பிளிப்கார்ட்டின் இந்த மெகா சேவிங் டேஸ் விற்பனையின் (Mega Saving Days Sale) போது, என்னென்ன மோட்டோ ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

1. மோட்டோ எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 17% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.29,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.55-இன்ச் பிஓஎல்இடி டூயல் கர்வ்டு டிஸ்பிளே, ஐபி68 ரேட்டிங், மீடியாடெக் டைமன்சிட்டி 7030 சிப்செட், 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜ், 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவைகளை கொண்டுள்ளது.

2. மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 20% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 21% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.13,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, டால்பி அட்மோஸ் உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 20W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

3. மோட்டோ ஜி54 (Moto G54 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 22% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மை யுஐ 5.0 உடன் இயங்குகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14-க்கான அப்டேட்டை பெறும் என்றும், 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்றும் மோட்டோரோலா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

இது 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஐஓஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.
ஐபி52-ரேட்டிங் வாட்டர் ரெப்பல்லென்ட் கட்டமைப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. மேலும் இதில் டால்பி அட்மோஸ் ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன. கடைசியாக இது 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 33W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








