ஆஹா.. இந்த 3 காரணங்கள் போதுமே.. Nothing Phone 2-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க!
நத்திங் போன் 2 (Nothing Phone 2) கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரியான வெளியீட்டு தேதி (Launch Date) இன்னும் அறிவிக்க்கப்படவில்லை என்றாலும் கூட, நத்திங்கின் இரண்டாவது ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, நத்திங் போன் 2-வில் நாம் காணவுள்ள முக்கிய அம்சங்கள் (Major Features) மற்றும் முக்கிய மேம்படுத்தல்கள் (Important Upgrades) வெளிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அவைகளில் மிகவும் முக்கியமான 3 விஷயங்களை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

01. ஹார்ட்வேர் (Hardware): கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனமானது, வரவிருக்கும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த குவால்காம் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் (Snapdragon 8 Gen 2) மூலம் இயக்கப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது நத்திங் போன் 2-வில் உள்ள ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் ப்ராசஸர் உடன் ஒப்பிடும் போத இது ஒரு பெரிய மேம்படுத்தல் ஆகும். பெரும்பாலான மதிப்பாய்வுகளின் படி, நத்திங் போன் 1 ஆனது மல்டி-டாஸ்கிங்கை நன்றாக நிர்வகித்தது. அதை விட நத்திங் போன் 2 சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மேலும் நத்திங் போன் 2 ஆனது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் குறைந்தபட்சம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. ஒருபக்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், மறுபக்கம் நல்ல ரேம் மற்றும் ஸ்டோரேஜ்; ஆகமொத்தம் நத்திங் போன் 2 ஆனது உண்மையில் ஒரு பவர்ஹவுஸ் ஆக இருக்கப்போகிறது என்பது தெளிவாக புரிகிறது.
02. சாஃப்ட்வேர் (Software): ஹார்டுவேரை போலவே நத்திங்போன் 2 ஆனது மென்பொருளிலும் நல்ல மேம்படுத்தலை பெற உள்ளது. ஏனென்றால், நத்திங் போன் 2 ஆனது நத்திங் ஓஎஸ் 2.0 மூலம் இயக்கப்படவுள்ளது. இது பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய அம்சங்களுடன் வரும் என்று நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் வழக்கம் போல் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனும் 3 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளையும் 4 வருட செக்யூரிட்டி புதுப்பிப்புகளையும் பெறும் என்பதையும் நத்திங் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, நத்திங் போன் 2 ஆனது அதன் பயனர்களுக்கு நல்ல ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்க உள்ளது.
03. டிசைன் (Design): நத்திங் போன் 1 ஆனது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த தோற்றமுடைய ஸ்மார்ட்போன்களில் (Best-looking smartphones) ஒன்றாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நத்திங் போன் 2-வும் அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வதை நத்திங் நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் இறுதி வடிவமைப்பு (Final design) இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட, நத்திங் போன் 2 ஆனது புதிய கிளிஃப் வடிவங்கள் (Glyph patterns) மற்றும் கஸ்டமைசேஷன்களுடன் (Customizations) சில வடிவமைப்பு மாற்றங்களை உள்ளடக்கும் என்று வதந்திகள் பரவுகின்றன.
நத்திங் போன் 2-வின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒட்டுமொத்தமாக, வன்பொருள் மற்றும் மென்பொருளின் அடிப்படையில் நத்திங் போன் 2 ஆனது அதன் முன்னோடியான நத்திங் போன் 1-ஐ விட பெரிய அளவிலான மேம்படுத்தல்களை பெரும் என்பது போல் தெரிகிறது. ஆகையால் இதன் விலையும் சற்றே அதிகமாக இருக்கும். இதன் விலை ரூ.40,000 முதல் ரூ 50,000 க்குள் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








