இனி இந்த 3 iPhone-களும் கிடைக்காது! இந்த பக்கம் iPhone 16e அறிமுகம் செஞ்சிட்டு அந்த பக்கம் Apple பார்த்த வேலை!
ஒவ்வொரு முறையும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ததும், ஆப்பிள் நிறுவனம் அதன் சில பழைய மாடல்களை டிஸ்கன்ட்டினியூ (Discontinue) செய்வது (அதாவது விற்பனை செய்வதை நிறுத்துவது) வழக்கம் தான். அப்படியாக நேற்று (பிப்.19) இரவு அறிமுகமான ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 3 பழைய மாடல்களை டிஸ்கன்ட்டினியூ செய்துள்ளது.
அதென்ன மாடல்கள்? சொல்லவே வேண்டாம். ஐபோன் 16இ அறிமுகம் ஆனதும் டிஸ்கன்ட்டினியூ செய்யப்பட்டுள்ள முதல் மாடல் - ஐபோன் எஸ்இ (2022) மாடல் ஆகும். 2025 ஆம் ஆண்டில் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆப்பிள் இதன் மாடல் பெயரை ஐபோன் 16இ ஆக மாற்றியுள்ளது. இதன்மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ சீரிஸை அதிகாரப்பூர்வமாக கைவிட்டுள்ளது.

இதோடு சேர்த்து ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மேலும் 2 பழைய-ஜென் ஐபோன்களை இனிமேல் உங்களால் வாங்க முடியாது. அது ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்கள் ஆகும். இருப்பினும் ஐபோன் 14 ஆனது இன்னமும் ஆப்பிளின் மற்ற அவுட்லெட் வழியாக வாங்க கிடைக்கின்றன. அதாவது ஐபோன் 14 மெல்ல மெல்ல சந்தையில் இருந்து காணாமல் போகும் என்று அர்த்தம்.
மேலும் ஐபோன் 16இ மாடலின் விலை ஆனது தற்போதைய ஐபோன் 14 மாடலின் விலைக்கு மிகவும் அருகில் உள்ளது. இதுவும் கூட ஐபோன் 16 டிஸ்கன்ட்டினியூ செய்வபடுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஒருவேளை வாங்கினால் ஐபோன் 14 மாடலை தான் வாங்குவேன் என்பவர்கள் பிளிப்கார்ட் அல்லது அமேசான் போன்ற வலைத்தளங்களை அணுகலாம்; அதுவும் ஸ்டாக் தீர்ந்துபோகும் வரை மட்டுமே வாங்க கிடைக்கும்.
இந்தியாவில், புதிய ஐபோன் 16இ மாடலின் விலை ரூ.59,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் ப்ரீ-ஆர்டர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், பின்னர் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் டெலிவரி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபோன் 16இ மாடலின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும். ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது.
மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, நியூரல் என்ஜின் ஏ13 -ஐ விட இது ஆறு மடங்கு வேகமாக ஏஐ மாடல்களை செயலாக்க முடியும்.
எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்
கேமராக்களை பௌத்தவாரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது - இது கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும்.


Click it and Unblock the Notifications








