கை அசைவில் கண்ட்ரோல் ஆகும் Realme போன்.. கனவுல கூட நினைக்காத விலை.. கண்ண மூடிக்கிட்டு வாங்க 3 காரணங்கள்!
கை அசைத்தால் கண்ட்ரோல் ஆகும் ஏர் கெஸ்சர்ஸ் (Air Gestures) அம்சங்களுடன் ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ சீரீஸின் கீழ் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது வருகிற மார்ச் 22 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான்.காம் (Amazon.com) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) இணையதளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.

என்ன விலை? ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும்; அதன் விலை ரூ.19,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனை சலுகை ஏதேனும் உண்டா? ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் கிரீன் (Green) கலர் ஆப்ஷனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2299 மதிப்புள்ள ரியல்மி டி300 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்ஸ் (Realme T300 TWS Earphones) இலவசமாக கிடைக்கும்.

நம்பி வாங்கலாமா? ஒரே வரியில் கூற வேண்டுமென்றால்.. ரூ.20,000 க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை (Best Phone Under Rs.20000) தேடும் எவருமே ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கலாம். ஏன் என்பதற்கான 3 நியாயமான காரணங்களையும் எங்களால் முன்வைக்க முடியும்.
முதல் காரணம் - விலையை மீறிய வடிவமைப்பு: சமீபத்தில் அறிமுகமான மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் கூட ஈர்க்கும்படியான டிசைன்களை காண முடியவில்லை. ஆனால் ரூ.18,999 க்கு வரும் இந்த ரியால்மி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டோன் பினிஷ் உடன் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் டிசைனை இன்னும் மேம்படுத்தும் வண்ணம், இது கிளாஸ் கிரீன் (Glass Green) மற்றும் கிளாஸ் கோல்டு (Glass Gold) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில்.. பளபளப்பான பாலிகார்பனேட் ஃபிரேம் (Polycarbonate frame) மற்றும் மெட்டாலிக் பாலிஷ் (Metallic polish) உடனான ஸ்டீல் பினிஷ் (Steel finish) உடன் வருகிறது.
இரண்டாவது காரணம் - திடமான லோ லைட்டிங் போட்டோகிராஃபி: பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் கூட விலைக்கு ஏற்ற கேமரா பெர்ஃபார்மென்ஸை வழங்குவதில்லை; குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்கள் எடுக்கும் போது பல போன்கள் திணறும். ஆனால் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அப்படி இல்லை!
ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனின் மெயின் ரியர் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் உள்ளது. இந்த சென்சார் ரூ.20,000 க்குள் என்கிற பிரிவில் ஒரு கேம் சேஞ்சிங் அம்சமாகும். இந்த சென்சார், மங்கலான வெளிச்சத்தில் கூட "முடிந்த அளவிலான" தெளிவான மற்றும் விரிவான புகைப்படங்களை எடுக்கிறது.
மூன்றாவது காரணம் - ஏர் கெஸ்சர்ஸ்: இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு இதையொரு முக்கியமான காரணம் என்றும் கூறலாம். இதில் உள்ள ஏர் கெஸ்சர்ஸ் அம்சங்கள் ஆனது "சாதாரண ஸ்மார்ட்போன் அனுபவத்திற்கு" அப்பால் உங்களை கொண்டு செல்லும். இன்னும் சோதனை நிலையில் உள்ள இந்த புதிய அம்சம், ஸ்க்ரீனை தொடாமலேயே, கை சைகைகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போனின் சில செயல்பாடுகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் 16ஜிபி வரையிலான ரேம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.1, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 67W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








