Home
Mobile

மீண்டும் இலவசத்துக்கு இறங்கிய Google.. Pixel போன் வாங்கினால் 3 சேவைகள் FREE.. எந்த மாடல்?

கூகுள் (Google) நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிக்சல் 9 சீரீஸை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த பிராண்ட் பட்ஜெட் விலையில் பிக்சல் 9ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கூகுளின் இந்த மிட்-ரேஞ்ச் மாடல் வருகிற மார்ச் 19 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலைப்பாட்டில் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறப்பு சலுகைகளை விவரிக்கும் புதிய லீக் ஒன்று ஆன்லைனில் வெளிவந்துள்ளது. பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விற்பனையை அதிகரிக்க சில பிரீமியம் சேவைகளுக்கான இலவச சந்தாக்களை வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. இதுபோன்ற இலவசங்கள் பிக்சல் 9 சீரீஸிலும் கிடைக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Pixel போன் வாங்கினால் 3 சேவைகள் FREE.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனிற்கான இலவசங்களை விவரித்துள்ளது. அதன்படி இந்த கூகுள் ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு இலவச ஃபிட்பிட் பிரீமியம் சந்தா, மூன்று மாதங்களுக்கு இலவச யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) சந்தா மற்றும் 100ஜிபி கூகுள் ஒன் (100GB Google One) சந்தா கிடைக்கும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஜெமினி அட்வான்ஸ்டு அம்சங்கள் கிடைக்காது என்றும், இதற்காக அவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. பிக்சல் 9 மாடலுக்கான ப்ரீ-ஆர்டர் மார்ச் 19 முதல்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஷிப்பிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது பிக்சல் 9 சீரீஸில் உள்ள அதே டென்சர் ஜி4 சிப்செட்டை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இது 6.3-இன்ச் ஆக்சுவா டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம். இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கலாம். மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை பெறலாம்.

கேமராக்களை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். கடைசியாக இது 23W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,100mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இதில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இடம்பெறவும் வாய்ப்பு உள்ளது.

முன்னதாக வெளியான கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் Actua OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது Titan M2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4ஏக் வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 Free Access 100GB Google One YouTube and Fitbit Premium For Pixel 9a Buyers Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X