Home
Mobile

வெய்ட்டிங்லயே வெறி ஏறுது.. இன்னும் 5 நாள் தான்.. iPhone 17 Pro மாடலில் காத்திருக்கும் 3 ஆச்சரியங்கள்!

டெக்னாலஜி மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பாக பெரிய ஆர்வம் இல்லாதவர்கள் கூட, ஆவலுடன் அறிந்துகொள்ள விரும்பும் ஒரு விஷயம் உண்டென்றால் அது - "இந்த வருஷம் வந்த லேட்டஸ்ட் ஐபோனின் விலை என்ன?" என்பது தான். அதுதான் இந்தியர்கள் மத்தியில் - ஆப்பிளின் ஐபோன்களின் மீதிருக்கும் 'கிரேஸ்'!

அப்படியாக 2025 ஆம் ஆண்டிற்கான ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் - வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே இம்முறை பிளஸ் மாடலுக்கு பதிலாக புதிய ஏர் மாடல் அறிமுகமாகும் என்கிற தகவல் ஐபோன் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

iPhone 17 Pro மாடலில் காத்திருக்கும் 3 ஆச்சரியங்கள்!

இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனம் ஆனது அதன் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் "3 ஆச்சிரியங்களை" சேர்க்கும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதென்ன ஆச்சரியங்கள்? 2025 ஐபோன் சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

ஐபோன் 17 சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்?
1. ஐபோன் 17 (iPhone 17)
2. ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro)
3. ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air - இது ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு மாற்றாக, ஸ்லிம் மற்றும் லைட்வெயிட் டிசைனுடன் வரலாம்)
4. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)

ஐபோன் 17 சீரிஸின் ப்ரோ மாடல்களில் காத்திருக்கும் 3 ஆச்சரியங்கள்: முதல் ஆச்சரியம் என்னவென்றால், டிப்ஸ்டர் இன்ஸ்டன்ட் டிஜிட்டல் (Tipster Instant Digital) வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஐபோன் 17 சீரீஸின் 2 ப்ரோ மாடல்களுமே நேரடி சூரிய ஒளியில் பயன்படுத்த எளிதாக இருக்கும்படியான பிரகாசமான டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும்.

ஒப்பிடுகையில், ஐபோன் 16 சீரீஸின் ப்ரோ மாடல்கள் ஆனது 1,000 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ்-ஐ ஆதரிக்கிறது. அவுட்டோர்களில் 2,000 நிட்ஸ்-ஐ கொண்டுள்ளது. புதிய ஐபோன் 17 சீரிஸின் ப்ரோ மாடல்கள் ஆனது செயல்திறனை சமரசம் செய்யாமல் நீண்ட நேர ப்ரைட்னஸ்-ஐ வழங்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது ஆச்சரியம் என்னவென்றால், ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட குளிரூட்டும் அமைப்புடன், வெப்ப செயல்திறனை நிவர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. இது தேவைப்படும் கேம்களின் போது மென்மையான பிரேம் விகிதங்களையும், குறைவான பிரேம் வீழ்ச்சிகளையும் ஏற்படுத்தும், அதே நேரத்தில் வெப்பமான சூழ்நிலைகளில் 60fps இல் 4K வீடியோவை பதிவுசெய்யும்போது நிலைத்தன்மையையும் மேம்படுத்தும்.

மூன்றாவது மற்றும் முக்கியமான ஆச்சரியம் என்னவென்றால் - ஐபோன் 17 சீரீஸின் ப்ரோ மாடல்கள் ஆனது பேட்டரி லைஃப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய "பாய்ச்சலை" (அதிகரிப்பை) காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே "ஆப்பிளின் நீண்ட காலம் நீடிக்கும் ஐபோன்களாக மாறும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆனது 5000எம்ஏஎச்-க்கும் அதிகமான பேட்டரி திறனை கொண்டிருக்கும் என்று சில வதந்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது முதல் முறையாக இருக்கும். அதாவது ஐபோன்களில் பேக் செய்யப்பட்ட பேட்டரிகளிலேயே இது மிகப்பெரியதாக இருக்கும். .

ஐபோன் 17 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு குறித்த விவரங்கள்: "ஆவ் ட்ராப்பிங்" (Awe Dropping) என்கிற பெயரின் கீழ் நடக்கவுள்ள, ஆப்பிளின் 2025 நிகழ்வு ஆனது செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் தொடங்கும். ஆர்வமுள்ளவர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
3 Big Surprises Expected in Apple iPhone 17 Pro Models Which Launching in September 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X