Home
Mobile

1 வருஷம் பழைய சிப்செட்.. புதுசா வந்த இந்த OnePlus Phone-ஐ வாங்காம.. வேற என்னென்ன போன்களை வாங்கலாம்? | OnePlus

நல்லதா ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வராதா என்று ஏங்கி கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்களை பார்த்து.. "இதோ வந்துட்டேன்!" என்று கூறுவது போல.. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு வேரியண்ட்களுமே ஜூன் 27 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா (Amazon India), ஒன்பிளஸ் இஸ்டோர் (OnePlus eStore) வழியாக விற்பனைக்கு வரவுள்ளன. சிறப்பு அறிமுக சலுகையாக, ஐசிஐசிஐ (ICICI) மற்றும் ஒன்கார்டு (OneCard) பரிவர்த்தனை வழியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுசா வந்த இந்த OnePlus Phone-க்கு பதிலா வேற என்ன போனை வாங்கலாம்?

ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட், விலைக்கு ஏற்ற தரமான அம்சங்கள், கூடவே ரூ.1000 அறிமுக சலுகை என.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் எல்லா வகையான செக்பாக்ஸ்களையும் அசால்ட் ஆக டிக் செய்கிறது. இருந்தாலும் கூட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் மாடலுக்கு பதிலாக.. இதற்கு மாற்றாக.. வேறு ஒரு ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால்.. கீழ்வரும் 3 ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களில் (3 Alternative Smartphones For OnePlus Nord CE 4 Lite 5G) ஒன்றை "கண்களை மூடிக்கொண்டு" தேர்வு செய்யலாம்!

1. ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G): ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் மற்றும் பெஸ்ட் ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன் ஆன இது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

புதுசா வந்த இந்த OnePlus Phone-க்கு பதிலா வேற என்ன போனை வாங்கலாம்?

ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் 16 ஜிபி வரையிலான ரேம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.1, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16 எம்பி செல்பீ கேமரா, 67W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

2. மோட்டோ ஜி84 5ஜி (Moto G84 5G): ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி-க்கு சரியான ஈடாக பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.19,999 க்கு அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் இன்னமும் பெஸ்ட் போன்களில் ஒன்றாக திகழ்கிறது!

புதுசா வந்த இந்த OnePlus Phone-க்கு பதிலா வேற என்ன போனை வாங்கலாம்?

மோட்டோ ஜி84 5ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55-இன்ச் எப்எச்டி+ pOLED டிஸ்பிளே,ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா, 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி மற்றும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் போன்றவைகளை கொண்டுள்ளது .

3. லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G): ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி-யின் இன்னொரு நல்ல ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன் ஆன இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.18,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதுசா வந்த இந்த OnePlus Phone-க்கு பதிலா வேற என்ன போனை வாங்கலாம்?

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் இஐஎஸ் (EIS) ஆதரவுடன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார், 32எம்பி செல்பீ , 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மேற்கண்ட 3 ஸ்மார்ட்போன்களையும் தவிர்த்து, ரூ.19,998 க்கு வாங்க கிடைக்கும் ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) ஸ்மார்ட்போனையும் கருத்தில் கொள்ளலாம். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது "அதே" ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை (Snapdragon 695 SoC) தான் கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த இரண்டு தலைமுறை நோர்ட் சிஇ லைட் ஸ்மார்ட்போன்களிலும் கூட இது சிப்செட் தான் இருகிறது. ஆக இதற்கு பதிலாக சற்றே பழைய ஸ்மார்ட்போனை வாங்குவதில் எந்த தவறும் இல்லை!

Best Mobiles in India

English summary
3 Best Alternative Smartphones For OnePlus Nord CE 4 Lite 5G in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X