தலை சுத்தும் விலை.. 3 50MP கேமரா, 16GB ரேம், 1TB ஸ்டோரேஜ் உடன் வரும் நெக்ஸ்ட் OnePlus போன்.. என்ன மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் பட்ஜெட்-விலை மாடல்களான ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் (Nord Series) ஸ்மார்ட்போன்கள் மீது உங்களுக்கு எந்த சிறப்பு கவனமும் இல்லை என்றால்.. உங்களுடைய முழு கவனமும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் (Flagship) மாடல்கள் மீது மட்டும் தான் உள்ளதென்றால்.. ஒன்பிளஸின் இந்த "நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்" (Next Generation Smartphone) பற்றி வெளியாகியுள்ள ஒவ்வொரு அப்டேட்டையும் நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். உங்களில் சிலர் இது என்ன மாடல் என்பதை இந்நேரம் கண்டுபிடித்து இருக்கலாம். அது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் ஆகும்.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் 13-க்கு முன்பாக இன்னொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் அடுத்த மாதம் (ஜூலை) சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் (Snapdragon 8 Gen 3 chip) உடனான ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro) மாடலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் நிறுவனம், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் போனான ஒன்பிளஸ் 13 அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது மூன்று 50 மெகாபிக்சல் கேமராக்களை (Three 50MP Cameras) உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டிருக்கும். கூடவே இந்த மூன்று 50எம்பி கேமராக்களில் என்னென்ன சென்சார்கள் பயன்படுத்தப்படும் என்கிற தகவலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் சோனி எல்ஒய்டி-808 ப்ரைமரி கேமரா ( Sony LYT-808 primary camera), அல்ட்ராவைட் ஷாட்களுக்கான சோனி ஐஎம்எக்ஸ்882 கேமரா (Sony IMX882 camera for ultrawide shots) மற்றும் பெரிஸ்கோப் ஜூமிங் உடனான மற்றொரு சோனி ஐஎம்எக்ஸ்882 கேமரா (IMX882 camera for periscope zoom) பேக் செய்யப்படலாம் மற்றும் ஒவ்வொன்றும் 50 மெகாபிக்சல் ரெசல்யூஷனை வழங்கும். மேலும் ஒன்பிளஸ் 12 மாடலை போலவே இதுவும் ஹசல்பிளாட் கேமரா மேம்படுத்தல்களுடன் வரும்!
ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பிலும் கூட இதே எல்ஒய்டி-808 சென்சார் தான் ப்ரைமரி கேமராவாக உள்ளது. ஆனால் மீதமுள்ள 2 கேமராக்களும் 50எம்பி கேமராக்கள் அல்ல. ஒன்று 48-மெகாபிக்சல் ஐஎம்எக்ஸ்851 அல்ட்ராவைட் கேமரா (8MP IMX851 ultrawide camera) மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு (3x optical zoom support) உடனான 64-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் ஓவி64பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் (64MP OmniVision OV64B periscope telephoto camera) இணைக்கப்பட்டது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 3 ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (2K resolution and a 120Hz refresh rate) உடனான 6.8-இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி கர்வ்டு-எட்ஜ் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4எச்டி சிப்செட்டை (Snapdragon 8 Gen 4ht chipset) பேக் செய்ய அதிக வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மிக உயர்ந்த ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது 16 ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 1 டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் அனுப்பப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6,000mAh பேட்டரியை பேக் செய்யலாம். பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (wireless charging support) இல்லாமல் போகலாம். விலையை பொறுத்தவரை இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஆனது ரூ.89,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். Photo Credit: X/ @OnePlusClub


Click it and Unblock the Notifications








