முதல்ல ரூ.2000.. இப்போ ரூ.3500.. மொத்தம் ரூ.5500 விலை குறைப்பு.. வாட்டர் ப்ரூஃப் கொண்ட இந்த Samsung போன் மீது!
ஐபி67 வாட்டர் ரெசிஸ்டென்ட் ரேட்டிங் (IP67 Water Resistant Rating) உடன் வரும் சாம்சங் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது இரண்டாவது முறையாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல் மீது ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் ரூ.3500 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய வேகத்தில், கடந்த ஆண்டு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போனின் விலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல் விலைகுறைப்பானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரூ.2,000 விலை குறைக்கப்பட்டது. தற்போது கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.3500 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் விலைகுறைப்பிற்கு பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.36,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.38,999 க்கும் வாங்க கிடைத்தது. தற்போது மேலும் ரூ.3,500 விலை குறைக்கப்பட்டு 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.33,499 க்கும், 256ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.35,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய விலை நிர்ணயமானது, சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான சாம்சங் இந்தியாவிலும் பிரதிபலிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஆவ்ஸம் லைம், ஆவ்ஸம் வயலெட் மற்றும் ஆவ்ஸம் கிராஃபைட் என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் உடனான 6.4-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான சாம்சங் ஒன் யுஐ 5.1 உடன் வருகிறது. எக்ஸிநோஸ் 1380 சிப்செட் (Exynos 1380 SoC) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி மெயின் கேமரா + எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 12எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 5எம்பி டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில், 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் வருகிற மார்ச் 26 ஆம் தேதி வரையிலாக அதன் ஹோலி பண்டிகை கால விற்பனையை நடத்துகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு விற்பனையின் கீழ் சாம்சங் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள், டேப்லெட்கள், ஏசிக்கள், ப்ரிட்ஜ்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் 60% வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 15 ஆம் முதல் மார்ச் 26 வரை நடைபெறும் சாம்சங் ஹோலி விற்பனையின் போது பல வகையான கேலக்ஸி எஸ் (Galaxy S) சீரீஸ், கேலக்ஸி ஏ (Galaxy A) சீரீஸ் மற்றும் ஃபிளாக்ஷிப் இஸட் சீரிஸ் (Z Series) ஸ்மார்ட்போன்களின் மீது 60% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் டிவிககள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங்கின் பிரீமியம் அல்லது லைஃப்ஸ்டைல் (Premium or Lifestyle models) மாடல்களின் மீது 48% வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மீது ரூ.15,250 வரையிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் (Additional exchange offer) அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








