இதான் கரெக்ட் ஆன ரேட்டு.. இப்போ வாங்கலாம்.. Nothing Phone 2 மீது 2-வது விலை குறைப்பு.. போட்றா 1 ஆர்டர்!
கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் நிறுவனம் தனது 3-வது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வரும் நிலையில்.. தனது 2-வது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2 (Nothing Phone 2) மீது மீண்டும் ஒருமுறை திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
இந்த பிப்ரவரி மாதத்தில், நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு நிலையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இரண்டாவது முறை விலைக்குறைப்பை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு டிசம்பரில் நத்திங் போன் 2 மீது ரூ.5,000 விலைக்குறைப்பை பெற்றது.

அதன் பிறகு நத்திங் போன் 2-வின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.44,999 இல் இருந்து ரூ.39,999 ஆக குறைந்ததது. மறுகையில் உள்ள 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 இல் இருந்து ரூ.49,999 ஆக குறைந்தது. தற்போது நத்திங் போன் 2-வின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் "மீண்டும்" ரூ.5000 வரையிலான விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 2-வின் புதிய விலை விவரங்கள்: பிளிப்கார்ட்டில் தற்போது, 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ஒயிட் கலரில் வரும் நத்திங் போன் 2 வேரியண்ட் ரூ.36,999 க்கும், டார்க் க்ரே கலரில் வரும் வேரியண்ட் ரூ.37,999 க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் ஒயிட் கலர் வேரியண்ட் ரூ.38,999 க்கும், டார்க் க்ரே கலர் வேரியண்ட் ரூ.39,999 க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2 என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.

முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.
இந்தியாவில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? நத்திங்கின் மூன்றாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2ஏ மாடலானது ரூ.30,000 - ரூ.35,000 க்குள் என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்டபுள்யூசி 2024 நிகழ்வின் (MWC 2024 Event) போது, பிப்ரவரி 27 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 2ஏ-வின் பேக் பேனலில் எந்தவிதமான கிளிஃப் இன்டர்ஃபேஸும் இருக்காது என்பது போல் தெரிகிறது. அதாவது நத்திங் போன் 1 மற்றும் நத்திங் 2 ஆகிய இரண்டுமே ஒரளவிற்க்கு விற்பனையாக, முக்கிய காரணமாக இருந்த கிளிஃப் இன்டர்ஃபேஸ் வடிவமைப்பானது நத்திங் போன் 2ஏ-வில் இடம்பெறப்போவதில்லை.
இதுதவிர்த்து ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட், டூயல் ரியர் கேமரா செட்டப்பில் 50எம்பி சாம்சங் ஜிஎன்9 சென்சார் + 50எம்பி ஜேஎன்1 கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32எம்பி சோனி IMX615 செல்பீ கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications