Home
Mobile

இதுதான் ஆஃபர்.. வெறும் ரூ.8499 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது போக்கோ எம்6 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போக்கோ 5ஜி போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இதுதான் ஆஃபர்.. வெறும் ரூ.8499 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் 6100 பிளஸ் 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ எம்6 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இதுதான் ஆஃபர்.. வெறும் ரூ.8499 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

போக்கோ எம்6 5ஜி போன் 5000mAh பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் போக்கோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
29 Percent Dsicount on Poco M6 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X