அமேசான் அதிரடி.. 64எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் விவோ ஒய்200 5ஜி (vivo Y200 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 6.67-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், 64எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்200 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைககள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதன்படி அமேசான் தளத்தில் விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,488 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.18488 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்200 5ஜி அம்சங்கள் (Vivo Y200 5G specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி போன். அ 22400 x 1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட்,
எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 394 பிக்சல் டென்சிட்டி, டிசிஐ-பி3 (DCI-P3) வைடு கலர் காமட் (Wide Color Gamut) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Octa Core Snapdragon 4 Gen 1) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்தது. இந்த போனுக்கு மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை கொடுக்கும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) ஆதரவுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
64 எம்பி மெயின் கேமரா+ 2 எம்பி டெப்த் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன்.அதேபோல் இதில் பிளாஷ் மற்றும் டூயல் கலர் டெம்பரேச்சர் கொண்ட அரோ எல்இடி இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஆன்டி-ஷேக் ஓஐஎஸ் (Anti-Shake OIS) கேமரா மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக டூயல் வியூ (Dual View), லைவ் போட்டோ (Live Photo), சூப்பர் மூன் (Super Moon), டபுள் எக்ஸ்போஸர் (Double Exposure), டாக்குமென்ட்ஸ் மற்றும் விலாக் மூவி (Vlog Movie) போன்றகேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர இந்த போனின் கேமராவில் ஸ்டைலிஸ் நைட் ஃபில்டர்கள் (Stylish Night Filters) கொடுக்கப்பட்டுள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 44Wஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி உடன் விவோ ஒய்200 5ஜி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. ப்ளூடூத் 5.1, வை-பை 5, ஜிபிஎஸ், என்ஃஎப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி மாடல்.


Click it and Unblock the Notifications