பொசுக்குனு பட்ஜெட்.. ரூ.8249 போதும்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 15W சார்ஜிங்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக 50 எம்பி போர்ட்ராய்டு கேமரா, 1 டிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஆக்டா கோர் சிப்செட் போன்ற அம்சங்களுடன் விவோ ஒய்18 (Vivo Y18) போன் வெளியாகி இருக்கிறது. அமேசான் தளத்தில் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
விவோ ஒய்18 அம்சங்கள் (Vivo Y18 Specifications): இந்த விவோ போனில் 6.56 இன்ச் (1612 × 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 840 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி வருகிறது. 2.5டி கர்வ்ட் டிசைன் (2.5D Curved Design) கொண்டிருக்கிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) உடன் வருகிறது. இந்த விவோவில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 0.08 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இதுவொரு எச்டி போர்ட்ராய்டு கேமரா (HD Portrait Camera) மாடலாகும். இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஸ்டைலிஷ் நைட் ஃபில்டர்கள் (Stylish Night Filters) கொண்டிருக்கிறது.

மேலும், விவோ மாடல்களில் வரும் போர்ட்ராய்டு, பானோ, ப்போ, லைவ் போட்டோ போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதே பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது. இந்த விவோ ஒய்18 போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த பட்ஜெட்டிலும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) வருகிறது. 185 கிராம் எடை மற்றும் 8.39 மிமீ ஸ்லிம் பாடி வருகிறது.
இந்த விவோ ஒய்18 போனானது, 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. அதேபோல வழக்கமான வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. ஸ்பேஸ் பிளாக் (Space Black) மற்றும் ஜெம் கிரீன் (Gem Green) கலர்களில் ஆர்டருக்கு வருகிறது.
இந்த விவோ போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆகவும் இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வருகிறது. ஆகவே, இந்த போனை ரூ.8,249 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








