Home
Mobile

அடிச்சு தூக்கும் டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 13GB ரேம்.. 5160mAh பேட்டரி.. எந்த போன்?

அமேசானில் காதலர் தின விற்பனையை முன்னிட்டு டபுள் கர்வ்ட் டிஸ்பிளே, 64எம்பி கேமரா, 45W சார்ஜிங், 5160mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட டெக்னோ பாண்டம் எக்ஸ்2 (TECNO PHANTOM X2) பட்ஜெட்டில் கிடைக்கிறது.

டெக்னோ பாண்டம் எக்ஸ்2 அம்சங்கள் (TECNO PHANTOM X2 Specifications): இந்த டெக்னோவில் 6.8 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் கர்வ்ட் டிஸ்பிளே (FHD+ Curved Display) வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வருகிறது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 13GB ரேம்.. 5160mAh பேட்டரி போன்!

360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. டபுள் கர்வ்ட் டிசைன் (Double Curved Design) மற்றும் சிஎன்சி மெட்டல் மிடில் ஃபிரேம் (CNC Metal Middle Frame) கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் ஹாய்ஓஎஸ் 12 (HiOS 12) வருகிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9000 4என்எம் (Octa Core Dimensity 9000 4nm) சிப்செட் வருகிறது.

இந்த டெக்னோ போனில் 8 ஜிபி ரேம் (5ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. பிரீமியமான டிரிபிள் ரியஸ் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, ஆர்ஜிபிடபுள்யூ (RGBW) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த மெயின் கேமராவில் குவாட் ஃபிளாஷ்லைட் (Quad Flashlight) சப்போர்ட் வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது. அதோடு சூப்பர் நைட் (Super Night), டிரைபாட் மோட் (Tripod Mode), எச்டிஆர் மோட் (HDR Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல 10X ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 13GB ரேம்.. 5160mAh பேட்டரி போன்!

32 எம்பி செல்பீ வருகிறது. இந்த கேமராவிலும், ஏஐ போர்ட்ராய்டு, சூப்பர் நைட், கஸ்டம் மேக்கப் போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த டெக்னோ பாண்டம் எக்ஸ்2 போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. இந்த பாஸ்ட் சார்ஜிங் மூலம் 20 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.

டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் வேபர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor Chamber Cooling System) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) வருகின்றன.

இதுவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டிகள் வருகின்றன. மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே (Stardust Grey) ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது.

இவ்வளவு பிரீமியம் அம்சங்களை கொண்டிருந்தும், ரூ.39,999 பட்ஜெட்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், அமேசான் காதலர் தின விற்பனையை (Amazon Valentines Day Sale) ரூ.36,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியானது, பிப்ரவரி 14ஆம் தேதி வரையில் மட்டுமே செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
29 Percent Discount on TECNO PHANTOM X2 in Amazon Valentines Day Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X