முழுசா ரூ.3000 கட்.. ரூ.14799 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் 16ஜிபி ரேம், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொண்ட டெக்னோ கேமன் 20எஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது.
டெக்னோ கேமன் 20எஸ் ப்ரோ அம்சங்கள் (Tecno Camon 20s Pro Specifications): இந்த டெக்னோவில் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Camera System) வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்டுள்ளது.

குவாட் ஸ்பிளாஷ் வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் ஆர்ஜிபிடபுள்யூ அல்ட்ரா சென்சிடிவ் சென்சார் (RGBW Ultra Sensitive Sensor) வருகிறது. அதேபோல மைக்ரோ-ஸ்லிட் டூயல் பிளாஷ் (Micro-slit Dual Flash) கொண்ட 32 எம்பி அல்ட்ரா கிளியர் செல்பீ ஷூட்டர் வருகிறது. போர்ட்ராய்டு மாஸ்டர் (Portrait Master) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
4K போர்ட்ராய்டு வீடியோ ரெக்கார்டிங் (4K Portrait Video Recording), வீடியோ ஏஐ பியூட்டி (Video AI Beauty) சப்போர்ட் வருகிறது. மேலும், டூயல் போர்ட்ராய்டு வீடியோ (Dual Portrait Video), ஏஐ செல்பீ (AI Selfie) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு பக்காவான பட்ஜெட் மாடலாக இது இருக்கும்.
இந்த டெக்னோ போனில் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்பிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 395 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) டிசைனில் பிளாட் 2.5D எட்ஜ் கொண்டிருக்கிறது.
மேலும், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, சினிமா கிரேடு பி3 வைடு கலர் காமட் சப்போர்ட் கொண்டிக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பக்கா வீடியோ அவுட்புட் கொடுக்கும் மாடலாக இந்த டெக்னோ கேமன் 20எஸ் ப்ரோ போன் இருக்கும். இந்த டெக்னோவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.
ஹைஓஎஸ் 13 (HiOS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 8050 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் ஜி77 எம்சி9 ஜிபியு (ARM G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த டெக்னோ கேமன் 20எஸ் ப்ரோ போனில் 8 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 1 டிபிக்கான எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது. இந்த டெக்னோ கேமன் மாடலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. அதேபோல டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கிறது. இந்த டெக்னோவின் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது.
செரினிட்டி ப்ளூ மற்றும் டார்க் வெல்கின் ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,799ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் சம்மர் விற்பனையை முன்னிட்டு ரூ,3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. ஆகவே, ரூ.14,799 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








