இதைவிட்ட போச்சு.. முழுசா ரூ.10000 கட்.. 30X கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த போன்?
மார்கெட் மிரளும் தள்ளுபடியில் பிரீமியம் சாம்சங் போன் விற்பனைக்கு வரும்போது வாங்கி கொள்ளலாம் என்று காத்திருக்கும் பிரியர்களுக்கு பக்கா நேரம் வந்துவிட்டது. அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) போனானது, ரூ.10,000 தள்ளுபடியில் விற்பனையாகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S23 FE Specifications): இந்த போனில் டிஸ்பிளே, சிப்செட் மற்றும் கேமரா அம்சங்கள் அல்ட்ரா பிரீமியமாக வருகின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்ட 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.

இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட இன்பினிட்-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே மாடலாகும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஒன் யுஐ 5.1 (One UI 5.1) வருகிறது. சாம்சங்கின் ஆக்டா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2200 4என்எம் (Octa-Core Samsung Exynos 2200 4nm) சிப் வருகிறது.
மிரளவிடும் பர்ஃபாமென்ஸ் கொண்ட சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 920 ஜிபியு (Samsung Xclipse 920 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3X Optical Zoom), 30எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (30X Digital Zoom) சப்போர்ட் வருகிறது. யுஎச்டி 8கே (UHD 8K) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 10 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) வருகிறது.
25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) சாப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. அதுமட்டுமல்லாமல், வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging), வயர்லெஸ் பவர் ஷேர் (Wireless Power Share) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங்கில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கொண்டுள்ளது. இந்த போனில் மின்ட் (Mint), கிராஃபைட் (Graphite) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் முழுதாக ரூ.10,000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி டிஸ்கவுண்ட் பெறலாம். அதோடு ரூ.56,999 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








