Home
Mobile

முடிச்சு விட்டீங்க போங்க.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் (Samsung Galaxy M15 5G Prime Edition) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display), மீடியாடெக் சிப்செட், 50எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் மாடலுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

முடிச்சு விட்டீங்க போங்க.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Prime Edition Specifications): தரமான மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) வசதியுடன் வெளிவந்துள்ளது . மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2340 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 50 எம்பி பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ரியர் கேமராக்கள் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம்(10x Digital Zoom), ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது சாம்சங் இந்த போன்.பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிச்சு விட்டீங்க போங்க.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

6000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
29 Percent Discount on Samsung Galaxy M15 5G Prime Edition with 6GB Ram in Amazon Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X