Home
Mobile

வெளுக்குது சேல்.. ரூ.8,499-க்கு இறக்கியாச்சு.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. பட்ஜெட்ல 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் காதலர் தினத்தை முன்னிட்டு அடிமட்ட பட்ஜெட்டில் 5ஜி மாடல்கள் கிடைக்கின்றன. இதில் 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்களை கொண்ட போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) நம்ப முடியாத விலை குறைப்பில் கிடைக்கிறது. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாமலேயே நீங்கள் ரூ.2000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இந்த போக்கோ எம்6 5ஜி போனின் விவரங்கள் இதோ.

போக்கோ எம்6 5ஜி பிளிப்கார்ட் ஆஃபர் (POCO M6 5G Flipkart Offer): இந்த போக்கோ போனின் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,499ஆக இருக்கிறது. ஆனால், இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரூ.2000 விலை குறைப்பில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

வெளுக்குது சேல்.. ரூ.8499-க்கு இறக்கியாச்சு.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஆகவே, உங்களால் வெறும் ரூ.8,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதுவொரு விலை குறைப்பு சலுகையாக இருப்பதால், ரூ.2000 டிஸ்கவுண்ட் பெறுவதற்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்ய வேண்டியது இல்லை. இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை கொடுத்து இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G Specifications): இந்த போக்கோ 5ஜி மாடலாக இருப்பதால், பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (Octa Core 6nm MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் கிடைக்கிறது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாடலாக இருப்பதால், ஓஎஸ் லேட்டஸ்ட்டாக இல்லை.

ஆகவே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், இந்த போக்கோ எம்6 5ஜி 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட மாடல்களும் இருக்கின்றன. மூன்று மாடல்களிலும் 1 டிபி மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது.

இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இது பட்ஜெட்டைவிட கூடுதல் பீச்சராகும்.

இந்த போக்கோ எம்6 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஏஐ செகண்டரி கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் எதிர்பார்க்காதபடி போர்ட்ராய்டு, நைட், வீடியோ ஷட்டர் போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்பிளாஷ் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

இந்த போக்கோ எம்6 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி இருக்கிறது. 10W சார்ஜர் கொடுக்கப்படுகிறது. 8.19 தடிமன் மற்றும் 195 கிராம் எடை வருகிறது. இந்த பட்ஜெட்டில் 5ஜி மாடல் வேண்டுமானால், இந்த போக்கோ போன் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
29 Percent Discount on POCO M6 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X