பிளிப்கார்ட் அதிரடி.. ரூ.7,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் big bachat Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 6.74-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போக்கோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யபப்ட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.7999 விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் 6100 பிளஸ் 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். எனவே இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor), டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ எம்6 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போக்கோ போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ மாடல். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications