Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.3,449 ஆபரில் 7000mAh பேட்டரி OPPO போன்.. 50MP கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அண்டர்வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கொண்ட மாடல்களை பட்ஜெட்டில் களமிறக்கி வரும் ஓப்போ நிறுவனத்தின், ஓப்போ எப்33 5ஜி (OPPO F33 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. IP69K ரேட்டிங் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்தால், ரூ.3,499 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.31,550 விலைக்கு இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். யுபிஐ வழியாக ஆர்டர் செய்தாலும் தள்ளுபடி கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.3,449 ஆபரில் 7000mAh பேட்டரி OPPO போன்!

கூகுள் பே, போன்பே ஆப்கள் வழியாக ஆர்டர் செய்தால், ரூ.3,200 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.31,799 விலைக்கு வாங்கி கொள்ளலாம். நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளையும் கொடுக்கிறது. பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது.

ஓப்போ எப்33 5ஜி அம்சங்கள் (OPPO F33 5G Specifications): 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6460 மேக்ஸ் (6nm Octa Core MediaTek Dimensity 6360 MAX) சிப்செட்டை இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இருக்கிறது. கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ குரூபீ எக்ஸ்பர்ட் (AI Groupfie Expert), ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), பாப்அவுட் (Popout) மற்றும் டூயல் வியூ வீடியோ (Dual-View Video) உள்ளிட்ட பீச்சர்களை இந்த கலர்ஓஎஸ் 16.0 கொடுத்து இருக்கிறது.

ஏஜிசி டிடி-ஸ்டார் டிபிளஸ் (AGC DT-STAR D+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 1400 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டு இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமராவை இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. செல்பீ மற்றும் வாய்ஸ் கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமரா கிடைத்து உள்ளது.

மெயின் கேமராவுக்கு 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. மேலும், அண்டர் வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கிடைக்கிறது. இதை கொடுக்க IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியுடன் ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் வருகிறது. 8 எம்எம் தடிமன் கொண்டுள்ளது.189 கிராம் எடை கொடுத்துள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
29 Percent Discount on OPPO F33 5G With 6 GB RAM in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X