Home
Mobile

மார்கெட் காலி.. வெறும் ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) 29 சதவீத டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ப்ரீ இயர்பட்ஸ் சலுகையுடன் 50எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ஐடெல் பி55 பிளஸ் (itel P55 Plus) போன் கிடைக்கிறது.

பட்ஜெட் போன்களுக்கே கிராக்கி வந்துவிடும் போல என்று சொல்லும் அளவுக்கு கம்மியான விலைக்கு பக்கா அம்சங்களுடன் போன்களை களமிறக்கி வருகிறது, ஐடெல் நிறுவனம். இந்த வரிசையில் வெறும் ரூ 10000 பட்ஜெட்டுக்குள் வேகன் லெதர் பேனல் கொண்ட மாடலாக ஐடெல் பி55 பிளஸ் வெளியாகியது.

 ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. எந்த போன்?

டிசைன் மட்டுமல்லாமல், கேமரா, ரேம், பேட்டரி அம்சங்களிலும் பின்னிப்பெடல் எடுத்ததால், விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இந்த விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக அமேசான் தளத்தில் டிஸ்கவுண்ட் மற்றும் ப்ரீ ஐடெல் டி11 (itel T11) இயர்பட்ஸ் உடன் கிடைக்கிறது. முதலில், இந்த போனின் அம்சங்களை பார்த்துவிடுவோம்.

ஐடெல் பி55 பிளஸ் அம்சங்கள் (itel P55 Plus Specifications): இந்த ஐடெல்லில் 6.6 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டைனாமிக் பார் (Dynamic Bar) சப்போர்ட் வருகிறது. பஞ்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. ஆகவே, மீடியம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். இந்த ஐடெல் போனில் ஒரேவொரு வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 மெமரி கொண்டிருக்கிறது. மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தலாம். 50 எம்பி ரியர் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்டிருக்கிறது. ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait), சூப்பர் நைட் மோட் (Super Night Mode) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன.

இந்த ஐடெல் பி55 பிளஸ் போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட், ஸ்மார்ட் சார்ஜிங் (Smart Charging), லோவ் டெம்ப் சார்ஜிங் (Low Temp Charging) சப்போர்ட் இருக்கின்றன.

இந்த ஐடெல்லின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இது அந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, நிர்ணயிக்கப்பட விலை தான் என்றாலும், ரூ.999 மதிப்புள்ள ஐடெல் டி11 இயர்பட்ஸ் உடன் விற்பனைக்கு வருவதால், இப்போது நல்ல டிஸ்கவுண்ட் விலையாகவே இருக்கிறது.

லெதர் பேக் பேனல் கொண்ட ராயல் கிரீன் (Royal Green) மற்றும் கிளாஸ் பேனல் கொண்ட பிளாக் (Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுவொரு லிமிடெட் பிரீயட் சலுகையாகும். ஆகவே, பட்ஜெட்டில் போன் மற்றும் இயர்பட்ஸ் வேண்டுமானால், விரைவில் இந்த ஐடெல் பி55 பிளஸ் போனை ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
29 Percent Discount on itel P55 Plus With 50MP Camera 16GB RAM in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X