அதிரி புதிரி ஆர்டர்.. AMOLED டிஸ்பிளே.. 108எம்பி கேமரா.. ஆஃபரில் ஹானர் 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி (HONOR X9b 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் 108எம்பி கேமரா, 5800mAh பேட்டரி, AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் எக்ஸ்9பி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸமார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.19,998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஹானர் எக்ஸ்9பி 5ஜி அம்சங்கள் (HONOR X9b 5G Specifications): தரமான குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி . மேலும் MagicOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 6.78-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் (AMOLED display) ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல் வெளிவந்துள்ளது.. 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ், 1200 நிட்ஸ் பீக் ப்ரைன்ஸ் உள்ளிட்ட பலவேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
அல்ட்ரா-பவுன்ஸ் ஆன்டி-ட்ராப் 360-டிகிரி தொழில்நுட்பம் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக தனித்துவமான டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டிஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மிட்நைட் பிளாக்,எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனை வாங்க முடியும்.
5800mAh பேட்டரியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








