Home
Mobile

மிரளுது ப்ரீ-ஆர்டர்.. 24GB ரேம்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. SONY சென்சார்.. மார்கெட்டை அதிரவிட்ட மாடல்!

ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி ஓப்போ ரெனோ 11 சீரிஸ் (OPPO Reno 11 Series) மாடல்களின் ப்ரீ-ஆர்டரானது 280 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வளவு பெரிய பிரம்மாண்ட வரவேற்பு பெறும் அளவுக்கு அந்த போன்கள் என்னயிருக்கிறது?

சீனா மார்கெட்டில் ஓப்போ ரெனோ 11 (Oppo Reno 11) மற்றும் ஓப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) போன்கள் நவம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகின. இந்த போன்களின் விற்பனையானது, டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் அந்த போன்களுக்கான ப்ரீ-ஆர்டர் முன்கூட்டியே தொடங்கியது.

மிரளுது ப்ரீ-ஆர்டர்.. 24GB ரேம்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

இந்த ப்ரீ-ஆர்டரானது, அந்த நிறுவனத்தின் முந்தைய ஓப்போ ரெனோ 10 சீரிஸ் மாடல்களின் ப்ரீ-ஆர்டர் ரெக்கார்ட்டை விற்பனையை, சில நிமிடங்களில் முறியடித்துள்ளது. சொல்லப்போனால், அந்த மாடல்களின் ப்ரீ-ஆர்டரை விட 280 சதவீதம் அதிகமாக ஆர்டர் வந்துள்ளது. அதிலும் மூன்லைட் ஜெம் டிசைன் வைட் கலர் மாடல் அதிகப்படியான ஆர்டரை பெற்றுள்ளது.

ஓப்போ ரெனோ 11 அம்சங்கள் (OPPO Reno 11 Specifications): இந்த ஓப்போ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் வருகிறது. 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் கர்வ்ட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

இந்த ஓப்போ போனில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), புளோரைட் ப்ளூ (Fluorite Blue) மற்றும் மூன்ஸ்டோன் வைட் (Moonstone White) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட் இருக்கிறது.

மிரளுது ப்ரீ-ஆர்டர்.. 24GB ரேம்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

சோனி எல்ஓய்டி600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. அதோடு 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,675 ஆகவும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,235 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ரெனோ 12 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 11 Pro Specifications): இந்த ஓப்போ ப்ரோ போனில் 6.7 இன்ச் கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 1+ 4nm Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

மிரளுது ப்ரீ-ஆர்டர்.. 24GB ரேம்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4700mAh பேட்டரி வருகிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் மூன்ஸ்டோன் வைட் (Moonstone White) ஆகிய மூன்று கலர்கள் கிடைக்கின்றன. இதன் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.35,610ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.41,100ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
280 Percent Growth in Pre-orders on Oppo Reno 11 Series Standard Model Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X