Home
Mobile

ஆர்டர் அள்ளுது.. புதுசு வந்ததும் பழைய மாடல் மீது 28% டிஸ்கவுண்ட்.. 5ஜி, 6000mAh, IP64, 50MP கேமரா!

விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் டி சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில், முன்னதாக அறிமுகமான விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் தற்ப்போது, விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 28% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.17,499 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 26% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.18,999 க்கு பதிலாக ரூ ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஆர்டர் அள்ளுது.. புதுசு வந்ததும் பழைய மாடல் மீது 28% டிஸ்கவுண்ட்!

புதிய விவோ டி4எக்ஸ் 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள் (Vivo T4x 5G Price, Sale Date in India):
6ஜிபிரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.13,999
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.14,999
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.16,999

விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மெரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் ப்ரோடான் பர்பிள் (Proton Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற மார்ச் 12 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வரும்.

பழைய விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ-சிம்) ஆதரவுடன் வரும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எஃப்எச்டி எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை இது 4என்எம் அடிப்படையிலான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்டென்டட் ரேம் 3.0 அம்சத்தின்கீழ் பில்ட்-இன் ரேம்-ஐ மேலும் 8ஜிபி வரை விரிவாக்க முடியும். மறுகையில் உள்ள இன்டர்னல் ஸ்டோரேஜை, மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்f/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, முன்பக்கத்தில் எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விவோவின் கூற்றுப்படி இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 68 மணிநேரம் வரையிலான மியூசிக் பிளேபேக் டைம்-ஐ வழங்கும். இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

புதிய விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo T4x 5G Specifications Features):
- பிளாஸ்டிக் பாடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- லைவ் டெக்ஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்

- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா
- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30 fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்
- பெரிய 6,500mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
28 Percentage Discount on Vivo T3x 5G After New Vivo T4x 5G Phone Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X