Home
Mobile

அள்ளு அள்ளு.. இப்போ ரூ.8000 பட்ஜெட்டில்.. 120Hz டிஸ்பிளே, 48MP சோனி கேமரா, 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங்!

ரூ.10,000 என்கிற பட்ஜெட் கூட கொஞ்சம் அதிகம் தான்.. ரூ.8000 பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ளவர்கள் உடனே அமேசான் இந்தியா பக்கத்திற்கு செல்லவும். ஏனென்றால்.. ஏற்கனவே "விலையை மீறிய அம்சங்களுடன்" அறிமுகமான ஒரு டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது இன்னும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது!

என்ன மாடல்? தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) ஸ்மார்ட்போன் ஆனது 28% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.8,699 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். டெக்னோ பாப் 9 ஸ்மார்ட்போனில் 4ஜி வேரியண்ட்டும் உள்ளது. அதையும் 5ஜி மாடலையும் ஒன்றென குழப்பிக்கொள்ள வேண்டாம்.

அள்ளு அள்ளு.. இப்போ ரூ.8000 பட்ஜெட்டில்!

டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பாடி - நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating) உடன் வருகிறது. டெக்னோவின் கூற்றுப்படி இது லேசான தூறல்கள் மற்றும் நீர் தெறிப்பிற்கு எதிராக செயல்படும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.6 இன்ச் எல்சிடி பேனலை (LCD Display) கொண்டுள்ளது.

ஒப்பீட்டளவில், டெக்னோ பாப் 8 (Tecno POP 8) ஸ்மார்ட்போனில் நாம் கண்ட 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான டிஸ்பிளேவை விட, இது ஒரு நல்ல மேம்படுத்தலாகும். சிப்செட்டை பொறுத்தவரை டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6030 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Take a Poll

யுனிசாக் டி606 சிப்செட் (Unisoc T606 Chipset) கொண்டு இயக்கப்படும் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும். கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 48எம்பி சோனி ஏஐ ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஒப்பிடுகையில், டெக்னோ பாப் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி கேமரா தான் இருந்தது. ஆனால் அதுவும் 8எம்பி செல்பீ கேமராவையே கொண்டிருந்தது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த போன் என்எப்சி (NFC) ஆதரவுடன் வருகிறது. ரூ.8,499 என்கிற விலையில் என்எப்சி ஆதரவு இருப்பது அரிதான விஷயமாகும். கடைசியாக இது டூயல் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களையும் (Dual Dolby Atmos Speakers) கொண்டுள்ளது.

டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 263 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 12 என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி50 சிப்செட்டை (12nm MediaTek Helio G50 chipse) கொண்டுள்ளது. இந்த சிப்செட் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டார்ஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக 3ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் விரிவாக்கத்தையும் (Virtual RAM expansion) ஆதரிக்கிறது. இதன் மூலம் டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 6ஜிபி ஆக எக்ஸ்டெண்ட் செய்ய முடியும்.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைஓஎஸ் 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் (HiOS 14 out-of-the-box) மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இதில் 4எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (4x digital zoom) மற்றும் 1080பி வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு (1080p video recording support) கொண்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா யூனிட் உள்ளது. முன் கேமராவில் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டிடிஎஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட்டை (DTS-backed dual stereo speaker unit) கொண்டுள்ளது. மேலும் ஐஆர் ரிமோட் கண்ட்ரோலுக்கான (IR remote control) ஆதரவு, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
28 Percent Discount on Tecno POP 9 5G Phone in Amazon India Check Offer Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X