அடிச்சு தூக்கும் ஆர்டர்.. ரூ.16,999 பட்ஜெட்ல OIS கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. யாரு விடுவா?
அமேசான் விற்பனையில் 16 ஜிபி ரேம், 1டிபி மெமரி, ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, ஃபிளாஷ் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் கொண்ட டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி (TECNO CAMON 20 Pro 5G) போனுக்கு மிரளவிடும் தள்ளுபடி கிடைக்கிறது.
டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 20 Pro 5G Specifications): இந்த டெக்னோவில் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வகிறது. இதுவொரு அமோலெட் (AMOLED) பேனல் கொண்ட 10 பிட் டாட்-இன் டிஸ்பிளே (Dot-in Display) மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் வருகிறது.

இந்த டெக்னோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 8050 6nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் வருகிறது. அதோடு டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), யுஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
இந்த டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 64 எம்பி ரியர் கேமராவானது, ஆர்ஜிபிடபுள்யூ (RGBW) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் பி+ஜி லென்ஸ் (P+G Lens) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 2 எம்பி மேக்ரோ (Macro) மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது. லோவ் நைட் போட்டோகிராபி (Low Night Photograpy) சப்போர்ட் வருகிறது. 32 எம்பி அல்ட்ரா-கிளியர் செல்பீ ஷூட்டர் வருகிறது. ப்ரோ ஷூட்டர் மோட் (Pro-shooting Modes) மற்றும் வீடியோ எச்டிஆர் (Video HDR) சப்போர்ட் வருகிறது.
ஆகவே, பட்ஜெட்டிலும் பக்கா கேமரா அவுட்புட் எதிர்பாக்கலாம். இந்த இந்த டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி மாடலானது, 33W ஃபிளாஷ் சார்ஜிங் (Flash Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. வெறும் அரை மணி நேரத்தில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த டெக்னோவானது, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. அதேபோல வழக்கமான, வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டிகளும் உள்ளன.
இந்த போனில் செரினிட்டி ப்ளூ (Serenity Blue), பிரீடவுன் பிளாக் (Predawn Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட், ரூ.16,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் உடன் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications








