கடகடவென சரியும் ரியல்மி 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் Big Saving days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.13,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
குறிப்பாக 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் 2400 ×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரியல்மி பி1 5ஜி போன் ஆனது 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
அதன்படி நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode),
டூயல் வியூ-வீடியோ (Dual-view Video), ஃபிலிம் மோட் (Film Mode), டில்ட் ஸ்விப்ட் (Tift Shift) போன்ற பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது ரியல்மி பி1 5ஜி போன். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. இன்-டிஸ்பிளே 3டி ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் In-display (3D Fingerprint Scanner) கொண்டிருக்கிறது ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம். பின்பு IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் வெளிவந்துள்ளது. பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
இந்த ரியல்மி பி1 5ஜி போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








